ஹரிதாஸ் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹரிதாஸ் தாக்கூர் (பிறப்பு 1451 அல்லது 1450 ) ஒரு வைணவத் துறவி ஆவார். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினை முன்னெடுத்தவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். ரூபா கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமி, சைதன்யா மகாபிரபு ஆகியோரைப் போல ஹரிதாஸ் தாகூரும் கிருஷ்ண பக்தராவார். ஆண்டியா லிலாவின் (Antya lila) சைதன்யா சரிதாமிருதத்தில் அவரது நேர்மை மற்றும் தீவிரமான துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. இவர் ஹரே கிருஷ்ணா எனும் நாமத்தினை தினமும் 300,000 முறை உச்சரிப்பார்.[1] சைதன்ய மஹா பிரபு ஹரிதாஸ் தாகூரை நாமாச்சாரியா எனக் குறிப்பிடுகிறார்.

பின்னணி[தொகு]

ஹரிதாச தாகூர் இஸ்லாமிலிருந்து மதம் மாறிய வைணவர் ஆவார். தற்போது அவர் ஒரு இந்து துறவியாக வணங்கப்படுகிறார். வங்காளத்தில் சைதன்யாவின் 16 ஆம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே ஹரிதாச தாக்கூர் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து கடவுளின் அன்பைப் பரப்பினர்.

இளமைக்காலம்[தொகு]

தற்போதைய வங்காளத்தின் புரோன் (Buron) எனும் கிராமத்தில் பிறந்தார்.[2] இவர் சைதன்யா மஹாபிரபுவை விட 35 வயது மூத்தவர். ஹரிதாஸ் தாகூர் தன் தொடக்க காலத்தில் மாயா தேவியின் அவதாரத்தால் ஈர்க்கப்பட்டார்.

அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்[தொகு]

இவரின் பணிகளைத் தொடர்ந்து பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா 1966 ஆம் ஆண்டில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தினை உருவாக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிதாஸ்_தாகூர்&oldid=3018493" இருந்து மீள்விக்கப்பட்டது