உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிகதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதாகாலட்சேபம் என்பது கதை கூறுவதாகும். இது சமஸ்கிருதச் சொல் ஆகும். கதா என்பதன் பொருள் கதை, காலட்சேபம் என்றால் காலத்தைச் செலவழித்தல் என்பதாகும். கதை சொல்வது/கேட்பது மூலம் காலத்தைச் செலவழிப்பது என்பது இதன் முழுமையான பொருளாகும். இது ஹரிகதா காலட்சேபம் என்றும் அழைக்கப் பெறுகிறது. இது ஒரு ஒருங்கிணைந்த கலையாகும். இதில் உரை, நடிப்பு, இசை, அபிநயம் மற்றும் தத்துவக் கருத்துக்கள் சேர்ந்திருக்கும். இதிகாசப் புராணங்களிலிருந்து எடுக்கப்படுக்கின்ற கதைகள் இசையுடன் கதையாகின்றன.

19ம் நூற்றாண்டில் இக்கலை புதுப்பொலிவு பெற்று புகழடைந்தது. தஞ்சாவூர் கிருஷ்ணபாகவதர் இக்கலையின் தந்தை எனப் போற்றப்படுகின்றார். இவரது காலத்திற்கு முன் புராண சொற்பொழிவுகளாக இருந்த பக்திக் கதைகள் மராட்டிய ஹரிகதா சம்பிரதாயத்தை ஒட்டி உருமாற்றம் பெற்று இசை உருப்படிகள் பலவற்றுடன் புதிய உருவத்தை அடைந்தது.

ஹரிகதை இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.

  1. பூர்வாங்கம்
  2. உத்தராங்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிகதை&oldid=2151812" இலிருந்து மீள்விக்கப்பட்டது