ஹன்லின்

ஆள்கூறுகள்: 22°28′54″N 95°48′00″E / 22.48167°N 95.80000°E / 22.48167; 95.80000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹன்லின்
நகரம்
ஹன்லின் - பியூவின் பண்டைய நகரம்
ஹன்லின் - பியூவின் பண்டைய நகரம்
ஹன்லின் is located in Myanmar
ஹன்லின்
ஹன்லின்
பர்மாவில் இடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஆள்கூறுகள்: 22°28′54″N 95°48′00″E / 22.48167°N 95.80000°E / 22.48167; 95.80000
Country மியான்மர்

ஹன்லின் என்பது மியான்மர் நாட்டில், சாகைங் பிரதேசத்தில் ஸ்வெபூ நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.பியூ நகரக் குழும காலத்தில் (கி.பி இரண்டாம் நூற்றாண்டு) இக்கிராமம் சிறந்து விளங்கியதாக கருதப்படுகிறது. தற்போது இக்கிராமம் அதில் உள்ள வெந்நீர் ஊற்றுகளுக்காகவும், தொல்லியல் இடங்களுக்காகவும் அறியப்படுகிறது. ஹலின், பிக்தனோ, ஸ்ரீ சேத்ரா ஆகிய நகரங்கள் பியூ ராஜாங்கத்தி வறண்ட ஐராவதி ஆற்றுப்படுகையில் இருந்த பாசன பகுதிகளில் எழுப்பப்பட்ட பண்டைய நகரங்களாகும். இவை இதன் பாரம்பரியத்திற்காக யுனெஸ்கோவால் மே 2014 அன்று வெளியிடப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றது. இதன் காலம் கி.மு 200 இல் இருந்து கி.பி 900 வரை ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

புவியியல்[தொகு]

ஹன்லினில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்கள், சாகைங் பிரதேசத்தில் ஸ்வெபூ மாவட்டத்தில் உள்ள வாட்லெட் இல் உள்ள கிராமத்தின் மேலே அமந்துள்ளது.[1] are located above the village in the Watlet Township, Shwebo District, Sagaing Division. It has a population of about 6,400 (2014).[2][3] 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள் தொகை 6,400.

வரலாறு[தொகு]

ஹன்லினின் வரலாறு கி.மு 200 இல் இருந்து கி.பி 900 வரை பினாகா, ஸ்ரீ சேத்ரா, மங்காமோ, ஹிலன்கி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த பியூ மக்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகும். இம்மக்கள் திபெத்திய-பர்மிய மொழி பேசினார்கள். இவர்கள் சீனாவுடனும், இந்தியாவுடனும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். பியூவின் ராஜாங்கம் பதினெட்டு ராஜாங்கங்கமா விரிவடைந்தது. பெரும்பாலும் இப்பகுதிகள் மியான்மரின் தென்பகுதிகளில் அமைந்துள்ளன. அவர்கள் பழக்கவழக்கங்கள், ஆடை அலங்காரங்கள், கலாச்சாரம், கலை ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் சர்வாஸ்திவாத பௌத்தப் பள்ளியில் பௌத்தர்களாக இருந்தார்கள். இந்தக் கட்டிடகலைகள் 11 முதல் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் பாகன் பகுதியில் கிடைக்கப்பெறுகின்றன. ஆரம்பகாலத்தில் இதன் தலைநகரமாக ஐராவதி ஆற்றுப்படுகையின் வடக்கு மூலையில் இருந்த ஸ்ரீ சேத்ரா இருந்தது. ஏழாம் நூற்றாண்டில் தலைநகரை ஹிலன்கி பகுதிக்கு பியூ மக்கள் மாற்றினார்கள். இது ஒரு வறன்ட பகுதியாகும். வெளிநாடுகளுடன் வனிக தொடர்பு வைத்துக்கொள்வதர்காக ஸ்ரீ சேத்ராவிலும் நிர்வாகம் நடைபெற்றது. இவர்களின் தென்பகுதி அண்டை நிலத்தவர்கள் திரிவேத புத்த மதத்தை பின்பற்றும் மான் இன மக்கள்.

தொல்பொருள் ஆராச்சியின் அடிப்படையில் வெண்கல காலத்தில் இருந்து ஹன்லின் மக்கள் வழ்விடமாக கருதப்படுகிறது. ஹன்லின் நகரம் கிமு 1 அல்லது 2 ஆம் ஆண்டில் பியு மக்களால் உருவக்கப்பட்டது.

யுனஸ்கோ அங்கிகாரம்[தொகு]

1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹன்லின், பெய்க்தனோ, ஸ்ரீ சேத்ரா ஆகிய இடங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை யுனெஸ்கோ 2014 ஆம் ஆண்டு மே மாதம் கத்தாரின் தோகாவில் நடைபெற்ற உலக பாரம்பரிய குழுவின் 38 ஆவது மாநாட்டில் அங்கிகரித்தது.[4][5] யுனெஸ்கோவின் அறிக்கைபடி பியூ ராஜ்ஜியம் கிமு 200 முதல் கிபி 900 வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் செழிப்பாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று இடங்களும் சேர்த்து 5,809 ஹெக்டேர் நிலப்பரப்பை ஆக்ரமித்துள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introducing Hanlin". Lonely Planet. Archived from the original on 29 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Richmond & Bush 2014, ப. 599-600.
  3. "Hanlin". Department of Archaeology, National Museum and Library. Archived from the original on 26 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  4. "Myanmar's 3 ancient cities now on UNESCO World Heritage list". Philippines News Agency, Xinhua. 23 June 2014. Archived from the original on 21 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Khinbe, Aung. "UNESCO: Myanmar's first site inscribed to World Heritage List" (PDF). The New Light of Myanmar. Archived from the original (pdf) on 1 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Pyu Ancient Cities". UNESCO Organization. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்லின்&oldid=3573721" இலிருந்து மீள்விக்கப்பட்டது