ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்காள பரமேஸ்வரி அம்மன் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் என்னும் பகுதியில் இருக்கும் கோவிலாகும்.


மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):பூங்காவனத்தாள், அங்காளம்மை, ராஜ ராஜேஸ்வரி, காளிகா தேவி, பெரிய நாயகி, பூங்கொடி அம்மன், ஆதிபராசக்தி.
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவு:மேல்மலையனூர், கொடுக்கன்குப்பம், தமிழ்நாடு 604 204
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:மாசி பெருவிழா, நவராத்திரி, ஆடி மாதம், பௌர்ணமி, அமாவாசை.
உற்சவர் தாயார்:ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்
வரலாறு
அமைத்தவர்:ஒரு மீனவ சமுதாயத்தவர்

மூலவர்[தொகு]

இந்தக் கோவிலில் மூலவராக இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மூலவர்


ஒரு கையில் தீய சக்தியை அழிக்க கூடிய கத்தியும். மறு கையில் வாழ்வளிக்கின்ற குங்குமமும் வைத்து அருள் பாலிக்கின்றாள். அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலில் சுயம்புவாக தோன்றிய புற்று இருக்கின்றது.

அதற்கு அருகே உற்சவர் சிலையான அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை இருக்கின்றது.

வரலாறு[தொகு]

முன்பு ஒரு காலத்தில் சிவனுக்கும் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்ததாகவும் பிரம்மா மிகவும் ஆணவத்தில் இருந்ததாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பார்வதி தேவி சிவன் வந்தால் சிவனுக்கு பாத பூஜை செய்வது வழக்கமாகும். அன்று ஒரு நாள் சிவனைக் காண பிரம்மன் கைலாயத்திற்கு சென்றார். அப்போது ஐந்து தலைகள் இருந்ததால் வந்தது சிவன் என்று தவறாக நினைத்து தேவி பார்வதி பாத பூஜை செய்தாள். அப்போதுதான் வந்திருப்பது பிரம்மன் என்று அறிந்த பார்வதி தேவி மிகவும் கோபப்பட்டாள். அங்கே வந்த சிவன் இதற்கெல்லாம் காரணம் அந்த ஐந்து தலைதானே இந்த ஒரு தலையை கிள்ளி விடுகிறேன் என்று சிவன் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளினார். பிரம்மனின் தலையைக் கிள்ளியதால் சிவனுக்கு பிரம்மஹஸ்தி தோஷம் பிடித்து விட்டது.

பிரம்மனின் தலை கொய்யப்பட்டது


பிரம்மனின் நிலையைக் கண்ட சரஸ்வதி மிகவும் கோபப்பட்டு பார்வதி தேவிக்கு நீ காட்டேரி போல் கூச்சலிட்டு பித்தன் போல் சுடுகாட்டில் திரிந்து ஆக்ரோஷ ரூபத்தை கொண்டு இருப்பாய் என்று சபித்து அதேபோல பார்வதி தேவியும் கோர ரூபத்தில் மாறி மயானத்தில் திரிந்தாள். சிவனும் பிரம்மஹஸ்தி தோஷத்தால் மயானத்தை தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தார். ஏனென்றால் எந்த உணவை கையில் எடுத்தாலும் அந்த உணவை அந்த பிரம்மனின் தலையே சாப்பிடுகிறது.

சிவன் பிரம்மஹஸ்தி தோஷத்தால் அவதிப்படுவது
அங்காள பரமேஸ்வரி அம்மன் உத்தரகுப்பம்

பிறகு பார்வதி தேவி அவள் அண்ணனான விஷ்ணுவிடம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கேட்டாள். நீ தண்டகாருண்யத்தில் போய் தவம் செய். அப்போது சிவன் அங்கே வருவார். நீ சுவையான உணவுகளைத் தயார் செய். அதை மூன்று உருண்டையாக பிடித்து வை. அந்த பிரம்ம கபாலத்திடம் ஒரு உருண்டையைப் போடு. அந்த பிரம்ம கபாலம் சுவை கண்டுவிடும். பிறகு இன்னொரு உருண்டையை எடுத்து அது வாயில் போடு. மூன்றாவது தடவை மேலே எரிந்து சூறையீடு. அப்போது அந்த பிரம்ம கபாலம் கீழே இறங்கும். அப்போது நீ பிடித்து விடலாமென்று விஷ்ணு கூறினார். பார்வதி தேவியும் அதேபோன்று தண்டகாருண்யம் என்னும் பகுதியில் போய் பல வருடங்களாக தவம் செய்தாள். தவத்தில் இருந்த பார்வதி தேவி தன் நிலையை அறியாததால் அவளைச் சுற்றி புற்று உருவானது. அவளால் மூச்சு விட முடியவில்லை. அவள் புற்றுக்குள் பாம்பாக மாறி தவம் செய்து கொண்டிருந்தாள். விஷ்ணு சொன்னதுபோல சிவன் அங்கு வந்தார். அப்போது அவள் செய்து வைத்த அறுசுவை உணவுகளை மூன்று உருண்டையாகப் பிடித்து இரண்டு உருண்டையை கபாலத்தின் வாயில் போட்டு மூணாவது உருண்டையை சூறையிட்டாள். பிரம்ம கபாலம் கீழே இறங்கியது அப்போது பார்வதி தேவி பிடிக்க முயன்றாள். சிவன் அங்கே இருந்து ஓடினார். இதை அறிந்த பிரம்ம கபாலம் மிகப்பெரிய ரூபம் எடுத்து சிவனை விடாமல் துரத்தியது. பார்வதி தேவிக்கோ மிகப்பெரிய கோபம் வந்தது. அவளும் விஸ்வரூபம் எடுத்தாள். பிரம்ம கபாலத்தைத் துரத்தினாள். மிகவும் கோபம் கொண்ட பார்வதி தேவி அந்த பிரம்ம கபாலத்தை மிதித்தாள். பிரம்ம கபாலம் பாதாள லோகத்திற்குச் சென்றுவிட்டது. சிவன் அங்கு இருக்கும் ஒரு குளத்தில் நீராடி விட்டார். தோஷம் நீங்கி விட்டது. ஆனால் பார்வதி தேவிக்கு வந்த கடும் கோபம் குறையவில்லை. ஆக்ரோஷமாக ஆடினாள். இவளின் கோபத்தை கட்டுப்படுத்த விஷ்ணு ஒரு தேரைச் செய்து வைத்து அதில் அந்த தேவியை உட்கார வைத்து பவனி வந்தார். அப்போது மிக ஆக்ரோஷமாக தேரில் ஏறி காட்சி தந்த பார்வதி தேவியின் ரூபத்தைக் கண்டு 330 கோடி தேவர்களும் அஞ்சினார்கள்

அங்காள பரமேஸ்வரி பிரம்ம கபாலத்திற்கு சூறையிடும் காட்சி


பிறகு சிவன் அந்த தேரில் உள்ள அச்சாணியை கழட்டி விட்டார். இதனால் தேரின் சக்கரம் உடைந்து தேர் கீழே கவிழ்ந்தது. பார்வதி தேவியும் கீழே விழுந்துவிட்டாள். அப்போதுதான் அவளுக்கு தன்னிலை புரிந்தது. பிறகு இரண்டு சக்திகளாக பிரிந்தனர். ஒன்று பார்வதி தேவி. இன்னொன்று அந்த ஆக்ரோச சக்தி பார்வதி தேவி. இந்த சக்தியின் பெயர் அங்காள பரமேஸ்வரி என்பது.

அங்காள பரமேஸ்வரி ஆதி சக்தியாக தோன்றிய காட்சி

அவளை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து அவர்களுக்கு இருக்கும் துஷ்ட சக்தியின் பிரச்சனைகள் மற்றும் குறைகள் எவ்வித பிரச்சனையாக இருந்தாலும் இவளால் தீர்க்கப்படும் என்று வரம் அளித்தாள். அதேபோன்று இங்கே சுயம்பு சிலையாகத் தோன்றினாள்.

ஸ்தலம் தோன்றிய வரலாறு[தொகு]

உலகம் பராசக்தியால் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயிணியாக பிறந்தார்.

தேவி தாட்சாயணி


தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானை நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் கிடைக்கப்பெரும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

சிவன் தாக்ஷாயிணியை திருமணம் செய்து கொள்கின்றார்

தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்று வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன்மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.

தாக்ஷாயணி யாகத்தில் வந்த காட்சி


இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்


இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர்,காளி,வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.

தக்ஷனின் யாகத்தை கலைத்த காட்சி
சிவன் தாட்சாயிணியின் எரிந்து போன உடலை வைத்து ஆடினார்

பிறகு சிவன் எரிந்த தாக்ஷாயிணியின் உடலை எடுத்து உக்கிரத்தாண்டவம் ஆடினார். அப்போது தாக்ஷாயிணியின் உடலில் இருந்த பகுதிகள் ஒவ்வொரு இடத்திலும் சிதறி விழுந்தது அப்போது வலது கை முதலில் விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்று கூறப்படுகிறது.


பிறகு புற்றாக இருந்த அங்காள பரமேஸ்வரியை அங்கே இருக்கும் மீனவர்களின் கனவில் வந்து நான் இங்கே புற்றில் பாம்பாக இருப்பதாகவும் என்னை பூஜிக்குமாறு கனவில் வந்ததாக கூறப்படுகிறது அதேபோல அங்கே இருக்கும் மீனவர்களும் பூஜையிட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது ஆச்சரியம் என்னவென்றால் அங்கே இருக்கும் ஒவ்வொரு மீனவர்கள் தன் பிரச்சனையை கூறி வேண்டுதல் வைக்கும் பொழுது அந்த பிரச்சனை நிவர்த்தி ஆகுவதாக கூறப்படுகிறது அதனால் அந்த தேவியை அங்கே இருக்கும் கிராமத்தால் வழங்கப்பட்டு வந்திருக்கிறார்கள் பிறகு தான் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக ஆனது.

விழாக்கள்[தொகு]

1.மாசி பெருவிழா

மலையனூர் மாசி பெருவிழா


மாசி பெருவிழா தான் இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தேர் திருவிழா, தீமிதி திருவிழா, தெப்ப திருவிழா, மாசி மயான கொள்ளை, மகா சிவராத்திரி அன்று சக்தி கரகம் தூக்குதல், ஊஞ்சல் உற்சவம் என்று பல விழாக்கள் நடக்கும்.

2. நவராத்திரி

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் உற்சவர் சிலைக்கு நவராத்திரி அலங்காரம் செய்த காட்சி


இந்த கோவிலில் சாரதா நவராத்திரியில் உற்சவர் சிலையான அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அந்த பத்து நாட்களும் பல்வேறு விதமான அலங்காரங்களை செய்து பூஜித்து வருவது வழக்கமாகும் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


3. ஆடி மாதம்

அங்காளம்மன் ஆடி மாதம் ஊஞ்சல் உற்சவம் அலங்காரம்


பொதுவாக ஆடி மாதம் என்றாலே பல கோவில்களில் திருவிழா நடைபெறும் இந்த கோவிலிலும் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு போன்ற நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கமாகும்.


பிறகு இந்த கோவிலில் சிறந்த நாளாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அம்மாவாசை, பௌர்ணமியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

ஊஞ்சல் உற்சவம்[தொகு]

இந்த புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதம்தோறும் அமாவாசையில் நடைபெறும்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையில் நடக்கும் ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சித்திரை முதல் பங்குனி வரை வரக்கூடிய அமாவாசையில் நள்ளிரவில் நடைபெறும் உற்சவம் ஆகும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சாமியாடி வழிபாடு மேற்கொள்வார்கள் இதற்காகவே தமிழ்நாட்டில் அமாவாசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பரிகாரங்கள்[தொகு]

இந்தக் கோவிலில் அம்மன் மிகவும் அகர ரூபத்தில் இருப்பதால் ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்படும்.


இந்த கோவிலுக்கு வந்தால் குழந்தை பாக்கியம், திருமணம் தடைகள், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை கோளாறு, பேய் பிடிப்பது என்று பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.