உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீஹர்ஷர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீஹர்ஷர் கி.பி. 12-ம் நூற்றாண்டின் பின்பாதியில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத மொழி கவிஞர்.[1] ஸ்ரீஹர்ஷர் நைடதம் எனும் சமசுகிருத காவியத்தை இயற்றியவர். மாளவ மன்னர் ஹர்ஷர் வேறு, இவர் வேறு.

பிறப்பு

[தொகு]

கி.பி. 12ம் நூற்றாண்டில் தந்தையார் ஹீரா'விற்கும், தாயார் மாமல்லதேவிக்கும் மகனாகப் பிறந்தார்.

படைப்பு

[தொகு]

நிசாத நாட்டு மன்னர் நளன் - தமயந்தியின் துன்பியல் கதையை கூறும் நைடதம் என்ற பெருங்காப்பியத்தை ஸ்ரீஹர்ஷர் இயற்றியுள்ளார். சமஸ்கிருத இலக்கியத்திலுள்ள காப்பியங்களில் ஐந்து காப்பியங்கள் பெருங்காப்பியங்களாகக் கருதப்படுகின்றன. அவைகளில் நைஷதமும் ஒன்று. இது மகாபாரதத்திலுள்ள நளன்-தமயந்தி கதையைத்தழுவி எழுதப்பட்டுள்ளது. இதனில் 2827 மொத்த சுலோகங்கள் கொண்ட 22 அத்தியாயங்கள் உள்ளன.[2] ஆனால் நளன்-தமயந்தி கதை அவர்கள் மணமாகும் வரையில் தான் உள்ளது. இவர் உண்மையில் 60 அத்தியாயங்கள் எழுதினார் என்றும் ஓர் அபிப்பிரயம் உண்டு.இவருடைய நைஷதத்தைத் தழுவித்தான் தமிழில் 'நள வெண்பா' புகழேந்தியால் புனையப்பட்டது என்ற கூற்றும் உள்ளது.

நைஷதம் மகாகாவியம் என்று போற்றப்பட்டாலும் அது சமஸ்கிருத இலக்கியம் தன் பொலிவை இழந்து போய்க்கொண்டிருந்த காலத்தில் தோன்றியது. ஸ்ரீஹர்ஷரின் காப்பியத்திறன் உயர்வாக இருந்தாலும் அதை அவர் பயன்படுத்தியிருக்கும் விதம் இலக்கியத்திற்கு இடையூறாகவே மாறிவிட்டது. மிகவும் கடினமான சொற்களைப் பயன்படுத்துவது, மிகவும் அதிகப்படியான சிலேடை முதலியவை காப்பியத்தை ரசிக்கமுடியாமல் கரடுமுரடாகச் செய்துவிட்டது. ஸ்ரீஹர்ஷர் தன் திறமையால் இப்படி ஒரு காப்பியத்தை இயற்றியதால் அவருக்குப் பின்னால் வந்த சமஸ்கிருதப்புலவர்கள் அவர் பாதையைப் பின்பற்ற முயற்சி செய்து தோற்றுப் போனார்கள்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Śrīharsha
  2. "சிறீஹர்சர்". பார்க்கப்பட்ட நாள் 1 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீஹர்ஷர்&oldid=2555389" இலிருந்து மீள்விக்கப்பட்டது