உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (Sri Ramakrishna Vijayam) 1921 ஆம் வருடத்திலிருந்து தமிழில் வெளியாகும் மாத இதழ். இந்த ஆன்மீக பண்பாட்டு இதழை சென்னையில் உள்ள இராமகிருஷ்ண மடத்தினர் வெளியிடுகின்றனர். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுவாமி சர்வானந்தர் இருந்த சமயம் 1921 தை முதல் தேதி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் துவங்கப்பட்டது. 1921-1922 இல் ’அண்ணா’ என்.சுப்ரமண்யம் இதன் ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் 1922-1925இல் சுவாமி விபுலாநந்தர் இதன் ஆசிரியராக இருந்தார்.

1921-1970 வருட கால கட்டத்தில் விளம்பரங்கள், படங்கள் இன்றி வந்தது. 2007 ஆம் ஆண்டு 55000 பள்ளி மாணவர்கள் இப்பத்திரிக்கையின் சந்தாதாரர்களாக இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஆகஸ்ட் 2007;
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராமகிருஷ்ண_விஜயம்&oldid=3325331" இலிருந்து மீள்விக்கப்பட்டது