ஸ்டான்லி பூங்கா, வான்கூவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Stanley Park
StanleyAerial Labelled.jpg
வகை மாநகரசபை
அமைவிடம் வான்கூவர்
ஆள்கூறு 49°18′N 123°08′W / 49.30°N 123.14°W / 49.30; -123.14ஆள்கூற்று : 49°18′N 123°08′W / 49.30°N 123.14°W / 49.30; -123.14
உருவாக்கப்பட்டது 1888
Operated by வான்கூவர் பார்க் வாரியம்
நிலை அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்
Official name: Stanley Park National Historic Site of Canada
Designated: 1988

ஸ்டான்லி பூங்கா (Stanley Park) கனடாவில் வான்கூவர் நகரில் உள்ள ஒரு பூங்கா. இது உலகின் மிகப் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகும். ஸ்டான்லி பார்க் ஆண்டு முழுவதும் பச்சை இலைகள் கொண்ட பாலைவனச் சோலையாகத் திகழ்கிறது. இது 405 எக்டேர் பரப்பளவு கொண்ட பூங்காவாகும். ஸ்டான்லி பார்க்கில் “இழந்த குளம்” மற்றும் “பீவர் ஏரி” போன்ற பல அடையாளங்கள் உள்ளன. பூங்கா உள்ளே “ஸ்டான்லி பார்க் விண்கலம்” மூலம் பயணிக்க முடியும். பூங்காவின் உள்ளே தொடருந்துகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் முழுக் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய பல இடங்கள் உள்ளன. ஸ்டான்லி பார்க்கில் உள்ள “மால்கின் பௌல்” என்ற இடத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். ஸ்டான்லி பார்க்கில் கண்கவர் கடற்கரைகள் உள்ளன. ஸ்டான்லி பார்க் செல்ல நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது. இருப்பினும் அங்கு உள்ள மீன் தொட்டி (Aquarium) பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.