ஷெர்லாக் (தொலைக்காட்சித் தொடர்)
ஷெர்லாக் ஒரு துப்பறியும் தொலைக்காட்சி தொடராகும். இது ஆர்தர்_கொனன்_டொயில் எழுதிய செர்லக்_ஓம்சு கதைகளின் சமகால தழுவுதலாகும். இதில் பெனெடிக்ட் கம்பர்பெட்சு ஷெர்லாக்காகவும் மார்டின் ஃப்ரீமேன் வாட்சனாகவும் நடிக்கிறார்கள். 2010ல் இருந்து ஒளிபரப்பாகும் இத்தொடரில்இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மூன்று எபிசொடுகள் என இதுவரை ஒன்பது எபிசொடுகள் வெளிவந்துள்ளன.
மிகவும் நல்ல விமர்சனங்களையே பெற்றுள்ள இத்தொடர் கோல்டன் குளோப் விருது பொன்ற விருதுகளை வென்றுள்ளது. இது இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 9.5 /10 மதிப்பீடு பெற்றுள்ளது.
அமைப்பு
[தொகு]இத்தொடர் "ஆலோசனைத் துப்பறிவாளர்" ஷெர்லாக் ஹோம்சும் அவரது நெருங்கிய நண்பர் மருத்துவர் ஜான் வாட்சனும் இலண்டன் மாநகரில் நடக்கும் குற்றங்களை புலனாய்பவர்கள். வாட்சன் ஆப்கானித்தானில் ராணுவ சேவை புரிந்தவர். காவல்துறையில் துப்பறிவாளராக இருக்கும் லெஸ்டெரேடும் இவர்களுக்கு உதவியாக இருப்பவர்.
இவர்களைத் தவிர அடிக்கடி தொடரில் வருபவர்கள் ஷெர்லாக்கின் எதிரியான மொரியார்ட்டி, ஷெர்லாக் மற்றும் வாட்சன் வசித்துவரும் வீட்டின் உரிமையாளருமான திருமதி ஹட்சன், ஷெர்லாக்கின் அண்ணன் மைக்ராஃப்ட் மற்றும் புனித பார்தொலொமேயொ மருத்துவமனையில் பனிபுரியும் மோலி ஹூப்பர் ஆவர்கள்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sherlock series 1 பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம் Hartswood Films
- Sherlock series 2 பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் at Hartswood Films
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஷெர்லாக் (தொலைக்காட்சித் தொடர்)
- Sherlock பரணிடப்பட்டது 2019-06-13 at the வந்தவழி இயந்திரம் at TV.com
- Sherlock பரணிடப்பட்டது 2020-10-21 at the வந்தவழி இயந்திரம் at "TV Guide"'