ஷாநகர்
சாநகர் இந்தியா, தமிழ்நாடு, கரூர் மாவட்டம், பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியமான பகுதி ஆகும். பள்ளபட்டியின் குறிப்பிடத்தகுந்த இடங்களில் ஷாநகரும் ஒன்றாகும். [1]
அமைவிடம்[தொகு]
கரூரிலிருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் பள்ளபட்டி அமைந்துள்ளது. திண்டுக்கல்லுக்கும், கரூருக்கும் இடையே உள்ள ஊர்களில் பள்ளபட்டி குறிப்பிடத்தகுந்த ஊராகும். மேலும் பள்ளபட்டி நெடுஞ்சாலை 47க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
நகர் உருவாக்கம்[தொகு]
ஷாநகர் ஆனது பள்ளபட்டியின் கிழக்கு விரிவாக்கப் பகுதியாகும்.[2] திண்டுக்கல் சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால் மிகக்குறுகிய காலத்திலேயே இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்தது.
மக்கள் தொகை[தொகு]
பள்ளபட்டியில் 30,624 மக்கள் வசிக்கின்றனர்..[3]
சிறப்பம்சங்கள்[தொகு]
ஷாநகரிலிருந்து தமிழகத்தின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் மக்கள் செல்லும் வகையில் பேருந்து வசதி உள்ளது.
வங்கிகள்[தொகு]
இப்பகுதியில் நான்கு தேசிய வங்கிகளின் கிளைகள் உள்ளன.
- பேங்க் ஆப் இந்தியா
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- கனரா வங்கி
துணைமின் நிலையம்[தொகு]
1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணைமின் நிலையம் ஒன்று பள்ளபட்டியில் உள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கல்வி நிலையங்கள்[தொகு]
இப்பகுதியில் இரண்டு கல்வி நிறுவனங்கள் உள்ளன
- பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி ( இப்பள்ளியானது 1955ல் தொடங்கப்பட்ட பள்ளியாகும் )
- கிரஸெண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பள்ளபட்டி பேரூராட்சி".
- ↑ http://www.muslimleaguetn.com/news.asp?id=2320[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "pallapatti Population Census 2011". பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2015.