ஷமிம் ஆரா
ஷமிம் ஆரா | |
---|---|
பிறப்பு | புத்லி பாய் 22 மார்ச்சு 1938 அலிகர், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 5 ஆகத்து 2016 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 78)
மற்ற பெயர்கள் | சோக அழகி[1] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1956 – 2010 |
வாழ்க்கைத் துணை | சர்தார் ரிந்த் அப்துல் மஜித் கரிம் பரீத் அகமது தபீர்-உல்-ஹசன் (before 2016) [2] |
பிள்ளைகள் | சல்மான் மஜித் கரிம் (மகன்) |
ஷமிம் ஆரா ( Shamim Ara) (22 மார்ச் 1938 - 5 ஆகஸ்ட் 2016)[3] ஒரு பாக்கித்தானைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் அடிக்கடி படங்களில் நடித்த சோகமான கதாநாயகி பாத்திரங்கள் காரணமாக "சோக அழகி" என்று அழைக்கப்பட்டார்.[1] தனது காலத்தின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தார். மேலும், 1960கள், 1970கள், 1980கள் மற்றும் 1990 களில் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராகவும் இருந்தார்.[1] பாக்கித்தான் திரையுலகில் எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் 1938 இல் பிரித்தானிய இந்தியாவின் அலிகர் நகரில் புத்லி பாய் என்ற பெயரில் பிறந்தார். ஆனால் பின்னர் "ஷமிம் ஆரா" என்ற திரைப்படப் பெயரை ஏற்றுக்கொண்டார்.[4] இவரது நடிப்பு வாழ்க்கை 1950 களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் முற்பகுதி வரை இருந்தது. 29 அக்டோபர் 1965 இல் வெளியான அப்போதைய மேற்கு பாக்கித்தானின் முதல் வண்ணப்படமான நைலாவில் (1965 திரைப்படம்) தனது முன்னணி பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். அதே சமயம் கிழக்கு பாக்கித்தானிலும் முதல் முழு நீள வண்ண இயக்கம் படம் சங்கம் (1964 உருது திரைப்படம்) அப்போது தயாரிக்கப்பட்டது. 23 ஏப்ரல் 1964 அன்று வெளியிடப்பட்டது [5]
தொழில்
[தொகு]1956 ஆம் ஆண்டில், பிரபல திரைப்பட இயக்குநரான நஜாம் நக்வியுடன் ஒரு சந்திப்பிற்குப் பிறகு, அவரது அடுத்த திரைப்படத்தில் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[4] அவர் தனது கன்வாரி பேவா (1956) திரைப்படத்திற்காக ஒரு புதிய முகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். மேலும் இவரது அழகான முகம், இனிமையான குரல், அணுகக்கூடிய ஆளுமை மற்றும் அப்பாவியானத் தோற்றம் மற்றும் புன்னகை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். நஜாம் நக்வி ஷமிம் ஆரா என்ற மேடைப் பெயரில் இவரை அறிமுகப்படுத்தினார். படம் பல பார்வையாளர்களை ஈர்க்கவில்லை என்றாலும், பாக்கித்தானியத் திரைப்படத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகினார்.[4][5]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஷமிம் ஆரா நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவரது முதல் திருமணம் தவிர அனைத்துத் திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. இவரது முதல் கணவர் மட்டும் விபத்தில் இறந்து போனார்.[4] கடைசியாக திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான தபீர்-உல்-ஹசனை மணந்தார். இவர்கள் 2005 ஆம் ஆண்டு வரை லாகூரில் வசித்து வந்தனர். பின்னர் தனது மகனுடன் இலண்டனுக்கு குடிபெயர்ந்தார். இவரது கணவர் பாக்கித்தானிலேயே தங்கிவிட்டார்.[6]
இறப்பு
[தொகு]பாக்கித்தானுக்கு வந்திருந்தபோது, 19 அக்டோபர் 2010 அன்று இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது,[7] சிகிச்சைக்காக மீண்டும் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆறு வருடங்கள் மருத்துவமனையிலும் வீட்டிலும் சிசிச்சையில் இருந்தார். மிக நீண்ட நோய்க்குப் பிறகு 5 ஆகஸ்ட் 2016 அன்று லண்டனில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.[3][5][6][7]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Shamim Ara: A Trailblazer in Pakistani Cinema". Youlin Magazine. September 29, 2022.
- ↑ Alavi, Omair (2016-08-14). "10 things you need to know about Shamim Ara". Images (Dawn Group of Newspapers). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ 3.0 3.1 "Humaima Malick tweets tribute to Shamim Ara". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Times News Network. 7 August 2016 இம் மூலத்தில் இருந்து 7 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160807231527/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Humaima-Malick-tweets-tribute-to-Shamim-Ara/articleshow/53584070.cms.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Profile of Shamim Ara". Cineplot.com website. 27 September 2009. Archived from the original on 11 October 2011. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.
- ↑ 5.0 5.1 5.2 Karan Bali (2016). "Profile of Shamim Ara". Upperstall.com website. பார்க்கப்பட்ட நாள் 23 June 2020.
- ↑ 6.0 6.1 Khan, Sher (11 June 2014). "Wishing for Shamim Ara's speedy recovery". The Express Tribune (newspaper) (Pakistan: Lakson Group) இம் மூலத்தில் இருந்து 5 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160805085605/http://tribune.com.pk/story/720362/wishing-for-shamim-aras-speedy-recovery/.
- ↑ 7.0 7.1 Salman (6 August 2016). "Yesteryear's heartthrob Shamim Ara dies in UK". http://www.dawn.com/news/1275747.