உள்ளடக்கத்துக்குச் செல்

வ. தனலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. தனலட்சுமி (ஆங்கில மொழி: V.Dhanalakshmi) (பிறப்பு:1975) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் மற்றும் மொழியியல் வல்லுநராவார்.[1] 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றவராவார்.[2]

பணி

[தொகு]

ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை ஏனாதி ராஜாப்பா கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல் தொடர்பான பிரிவில் தமிழ் முதுநிலை ஆய்வாளராக நான்காண்டுகள் (2007-2011) பணியாற்றினார்.[3] பின்னர் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 20 ஆண்டுகளாகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியதில் முன்றாண்டுகள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.[1] தற்போது, புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.[4] இவர் பல கணினிமொழியியல் திட்டங்களைத் தற்காலத் தமிழுக்கும் செவ்வியல் இலக்கியங்களுக்கும் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தமிழ்ச் சொற்களைப் பகுபத இலக்கண அடிப்படையில் பகுத்து, அவற்றின் இலக்கண வகைப்பாடுகளைத் தானாகவே காட்டும் மென்பொருள் கருவிகளை உருவாக்கியுள்ளார். தமிழ்த்தொடரியல், பொருண்மையியல், மின்னகராதி, இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற பிற கணினித்தமிழ் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.[5][6] தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், மேல்நிலை சிறப்புத் தமிழ் பாடத்திட்டக்குழு வல்லுநனராகவும் உள்ளார்.

கல்வி

[தொகு]
  1. முதுகலைப் பட்டம்(தமிழ்) -1998
  2. ஆய்வியல் நிறைஞர்(தமிழ்) 2001
  3. முதுகலைப் பட்டம் (ஊடகவியல்) 2005
  4. முனைவர் பட்டம் (மொழியியல்) 2011
  5. முதுகலைப் பட்டயம்(இயற்கை மொழிப் பகுப்பாய்வு) 2011

வெளியீடுகள்

[தொகு]

இவர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல கருத்தரங்குகளில் கணினித் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். பல பன்னாட்டு ஆய்விதழ்களிலும் கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[7] டேட்டா டிரைவன் ஷாலோ பார்சர் பார் தமிழ்(ஆங்கிலம்) மற்றும் நவீன மொழிபெயர்ப்பு ஆகிய இரு புத்தகங்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

[தொகு]
  1. 2020-ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
  2. ஆய்வுச் சுடரொளி விருது- 2022
  3. மொழியியல் மாமணி -2022

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Dr. Dhanalakshmi. V". புதுவைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
  2. "தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிப் பணி அறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவம்". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/777687-awards-ceremony-for-those-who-are-proud-of-the-development-of-the-tamil-language-and-literature.html. பார்த்த நாள்: 1 January 2024. 
  3. "தமிழறிஞர் பேராசிரியை வி. தனலட்சுமி (1975)". வலைத்தமிழ். https://www.valaitamil.com/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_20125.html. பார்த்த நாள்: 1 January 2024. 
  4. "Pondicherry University - Faculty Profile Details". புதுவைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
  5. "Dhanalakshmi, Vadivelu". ஸ்காபஸ். பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
  6. "வ. தனலட்சுமி". webofscience. பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
  7. "Dhanalakshmi V". கூகிள் ஸ்காலர். பார்க்கப்பட்ட நாள் 1 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._தனலட்சுமி&oldid=3858643" இலிருந்து மீள்விக்கப்பட்டது