உள்ளடக்கத்துக்குச் செல்

வோ இங்குயென் கியாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோ ஙுவென் கியாப்
Võ Nguyên Giáp
2008 இல் வோ ஙுவென் கியாப்
பட்டப்பெயர்(கள்)ஆன் வான் (சகோதரர் வான்)
பிறப்பு(1911-08-25)25 ஆகத்து 1911
குவாங் பின் மாகாணம், பிரெஞ்சு இந்தோசீனா
இறப்பு4 அக்டோபர் 2013(2013-10-04) (அகவை 102)
ஹனோய், வியட்நாம்
சார்புவியட்நாம்
சேவை/கிளைவியட்நாம் மக்கள் இராணுவம்
சேவைக்காலம்1944–1991
தரம்ஜெனரல்
கட்டளை
போர்கள்/யுத்தங்கள்

வோ கியென் கியாப் (Võ Nguyên Giáp, 25 ஆகத்து 1911 – 4 அக்டோபர் 2013)[1] வியட்னாமைச் சேர்ந்த மக்கள் இராணுவ அதிகாரியும் அரசியல்வாதியும் ஆவார். முதலாம் இந்தோ- சீனப் போரில் இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். முக்கியமான வியட்னாமியப் போர்களிலும் இரண்டாம் உலக்ப் போரிலும் பங்காற்றியுள்ளார்.. இதழாளராகவும், 1946 - 1947 ஆம் ஆண்டுகளில் வியட்னாமின் இராணுவ அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். வியட்னாமிய அரசு முக்கியமான இராணுவ விருதுகளை வழங்கி சிறப்பித்தது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் வோ கியென் கியாப். ஹனோய் பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். பள்ளிக்கூட ஆசிரியர். 'தீன் டாங்' என்ற பத்திரிகைக்குக் கட்டுரைகளும் எழுதி வந்தார்.

வியத்நாம் அப்போது பிரெஞ்சு காலனி நாடாக இருந்தது. காலனி ஆதிக்க எதிர்ப்புணர்வால், வியத்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காக விதிக்கப்பட்ட 13 மாதச் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலையான பிறகு வியத்நாமிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் இரு பத்திரிகைகளை நடத்தினார். வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதும் சீனத்துக்குத் தப்பினார் வோ. ஹோ சி மின்னுடன் இணைந்தார். 1944-ல் மீண்டும் வியத்நாமுக்கு வந்தார். [2]

ராணுவ தளபதி

[தொகு]

1954-ல் தீன் பீன் பு என்ற இடத்தில் தாக்குதல் நடத்தி பிரெஞ்சு ராணுவம் வீழ்த்த்ப்பட்ட பிறகு வியத்நாமுக்குச் சுதந்திரம் கிடைத்தது. பிறகு தெற்கு வியத்நாமில் அமெரிக்க ஆதரவில் நடைபெற்ற அரசையும், 1975 ஏப்ரலில் வோ கியான் கியாப் தலைமையிலான 'மக்கள் சேனை' போரில் வென்றது.

வியத்நாம் விடுதலைப் போர் நடந்த காலங்களில் பெரும்பாலும் ராணுவ அமைச்சராக 'வோ'தான் பதவி வகித்தார். அவரே ராணுவத் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.

1979-ல் அவரிடமிருந்து ராணுவத் துறை பறிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் தலைமைக் குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். 1991-ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அவராகவே விலகிக் கொண்டார்.

[2]

102-வது வயதில் இறப்பு

[தொகு]

முதுமை, உடல் நலிவு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒடுங்கிவந்த வோ தன்னுடைய 102-வது வயதில் ஹனோய் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அக்டோபர் 4, 2013 அன்று மரணம் அடைந்தார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Asian Heroes, டைம் (இதழ்)
  2. 2.0 2.1 "சென்றுவாருங்கள் வோ!" (in தமிழ்). தி இந்து (சென்னை: தி இந்து): pp. சிந்தனைக் களம் » செய்தியாளர் பக்கம். அக்டோபர் 7, 2013. http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B/article5207512.ece. பார்த்த நாள்: அக்டோபர் 14, 2013. 
  3. "வியத்நாம் வீரத் தளபதிக்கு நாளை இறுதிச் சடங்கு" (in தமிழ்). தீக்கதிர் (சென்னை: தீக்கதிர்): pp. உலகம். அக்டோபர் 13, 2013 இம் மூலத்தில் இருந்து 2014-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408033106/http://theekkathir.in/Vo%20Nguyen%20Giap. பார்த்த நாள்: அக்டோபர் 14, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோ_இங்குயென்_கியாப்&oldid=3535900" இலிருந்து மீள்விக்கப்பட்டது