வைபர்த் தவுகிளாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லீ வைபர்த் தவுகிளாசு
Allie Vibert Douglas
பிறப்புதிசம்பர் 15, 1894(1894-12-15)
மாண்டிரீல், கியூபெக்
இறப்புசூலை 2, 1988(1988-07-02) (அகவை 93)
கிங்சுடன், ஒண்டாரியோ
தேசியம்கனடியர்
பணிவானியலாளர்

அல்லீ வைபர்த் தவுகிளாசு (Allie Vibert Douglas), (திசம்பர் 15, 1894 – 2 ஜூலை 1988), ( இவர் வழக்கமாக தன் நடுப்பெயால் அழைக்கப்படுகிறார்)[1] ஒரு கனடிய வானியலாளர் ஆவார். இவரே கனடிய முதல் வானியற்பியலாளரும் ஆவார்.[2][3]

வாழ்க்கை[தொகு]

தவுகிளாசு பிறந்த ஆண்டே இவருடைய பெற்றோர் இருவருமே இறந்துவிட்டதால், இங்கிளாந்து, இலண்டனில் தன் அண்ணன் ஜார்ஜ் வைபர்த் தவுகிளாசுவுடனும் பாட்டியுடனும் வாழ்ந்துள்ளார்.[3] இவரது பாட்டனாராகிய மாண்புறு ஜார்ஜ் தவுகிளாசு பெயர்பெற்ற மெதடிய (மெதடிஸ்த) மதக்குருவும் கல்வியாளரும் ஆவார்.[4] இவரும் இவரது அண்ணனும் 1904 இல் மாண்டிரீலுக்குத் திரும்பிவந்து வெசுட்டுமவுண்ட் கல்விக்கழகத்தில் சேர்ந்து படித்தனர். வளர்ந்ததும், தவுகிளாசு அறிவியலில் ஆர்வம் கொண்டாலும் அவரது பாலினம் அதர்குத் தடையாக இருப்பதை உணரலானார்.ரிவர் பெ ஏன்பதாலேயே இவர் படித்த உயர்நிலைப்பள்ளி அறிவியல் குழுவில் சேர்க்கப்படவில்லை. இவரது அண்ணன் இச்சிக்கலுக்குத் தீர்வாக உரைகள் நிகழும்போது கதவைத் திறந்துவைத்து வகுப்பறைக்கு வெளியில் இருந்தே அறிவியல் உரைகளைக் கேட்க வழிசெய்துள்ளார். இவர் த்ன் வகுப்பில் உயர்தகைமையுடன் கல்வியை முடித்து மெக்கில் பலகலைக்கழகத்துக்கான உதவிநல்கையும் பெற்றுள்ளார்.[3]

இவர் 1912 இல் கணிதத்திலும் இயற்பியலிலும் மெக்கில் பல்கலைக்கழகத்தில் தகைமைப் பட்ட வகுப்பில் தொடங்கிப் படிக்கலானர். எனினும், இவரது மூன்றாம் ஆண்டு படிப்பின்போது முதல் உலகப்போர் வெடித்ததால் படிப்பு தடைபட்டது.லிவரது அண்ணன் அலுவலரகி, இங்கிலாந்து, இலண்டனில் தங்கியுள்ளார். ஆபோது அவர் அல்லீயையும் அத்தைகளாகிய மினா, மேரி இருவரையும் தன்னுடனரிலண்டனுக்கு வந்து தங்கும்படிக் கூறியுள்ளார். அல்லீ அப்போது தன் குடும்ப நண்பரின் வேண்டுதலின்பேரில் போர் அலௌவலகத்தில் புள்ளியியலாளராகச் சேர்ந்துள்ளார்.ஐவர் வேலைசெய்த இடத்தில் குண்டுகள் வெடித்தாலும்மயராது பணிபுரிந்து அன்று தேசியப் பொதுப்பணியில் ஈடுபட்ட அனைத்து மகளிரை விட உயர்ந்த சம்பளத்தைப் பெற்றுள்ளார். இவர் 1918 இல், தன் 23 ஆம் அகவையில், தனது பணிக்காக பிரித்தானியப் பேரரசு ஆணையைப் பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Douglas, Allie Vibert (1894-1988)". Queen's University Encyclopedia. 2014-05-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-01-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. Helen Sawyer Hogg (July 1989). "A. Vibert Douglas". Physics Today 42 (7): 88–89. doi:10.1063/1.2811101. http://www.physicstoday.org/resource/1/phtoad/v42/i7/p88_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2018-01-10. 
  3. 3.0 3.1 3.2 3.3 Crossfield, E. Tina (1997). Benjamin F. Shearer. ed. Notable women in the physical sciences : a biographical dictionary (1. publ. ). Westport, Conn. [u.a.]: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0313293031. https://archive.org/details/isbn_9780313293030. 
  4. Dent, John Charles (1880). The Canadian Portrait Gallery. II. Toronto: John B. Magurn. பக். 95. http://www.fadedpage.com/showbook.php?pid=20100711. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபர்த்_தவுகிளாசு&oldid=3582214" இருந்து மீள்விக்கப்பட்டது