வைஜயந்தி காசி
வைஜயந்தி காசி | |
---|---|
![]() | |
பிறப்பு | பெங்களூர் |
வைஜயந்தி காசி (Vyjayanthi Kashi) ஒரு இந்திய பாரம்பரிய குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார்.[1][2] குச்சிபுடி இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இவர் இந்திய நாடக இயக்குநராக இருந்த டாக்டர் குப்பி வீரண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். குப்பி வீரண்ணா, நடன முன்னோடிகளில் ஒருவராகவும், கன்னட நாடகத்திற்கு அதிக பங்களிப்பு செய்தவராகவும் இருந்தார். கன்னட நாடகத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த "குப்பி வீரண்ணா நாடக நிறுவனத்தை" நிறுவினார்.[3] திருமதி. வைஜயந்தி காசி ஒரு புகழ்பெற்ற குச்சிபுடி நடனக் கலைஞர்; நடன இயக்குநர் [4] மற்றும் சாம்பவி ஸ்கூல் ஆஃப் டான்ஸ் என்கிற நடனப் பள்ளியின் கலை இயக்குநர் ஆவார்.[5] அங்கு இவர், பாரம்பரிய நடன வடிவமான குச்சிபுடியைக் கற்பிக்கிறார். மேலும், கர்நாடக சங்கீத நிருத்யா அகாதமியின் தலைவராகவும் இருந்தார் [6][7][8][9]
தனிப்பட்ட தகவல்
[தொகு]திருமதி. வைஜயந்தி காசி, மறைந்த ஜே.எம். விஸ்வந்த் மற்றும் மறைந்த ஜி.வி. கிரிஜம்மாவின் மகள் ஆவார். வைஜயந்தி காசி தனது ஆறாவது வயதில் தும்கூரைச் சேர்ந்த ராமண்ணாவிடமிருந்து பரதநாட்டியத்தைக் கற்கத் தொடங்கினார். இறுதியில், இவர் முதல் தரவரிசையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் தங்கச் சங்கிலியையும் பரிசாக வென்றார். ஆரம்பத்தில் இவர் நடனத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே இறுதியில் இவர் கன்னட திரையுலகில் இந்திய திரைப்பட இயக்குநராக இருக்கும் டி.எஸ்.நாகபாரணாவுடன் பணிபுரிந்தார். இவர், தொலைக்காட்சி மற்றும் நாடகக் கலைஞரான விஜயா காசியை மணந்தார்.[10] இவருடைய மகள் பிரதீக்சா காசி, குச்சிபுடி நடனக் கலைஞராக உள்ளார்.
குச்சிபுடிக்கு அர்ப்பணிப்பு
[தொகு]பிற்காலத்தில், திறைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இது தான் விரும்புவதல்ல என்று இவர் உணர்ந்தார். அதே நேரத்தில், கர்நாடகாவிற்கு வந்த குச்சிபுடி குரு சி.ஆர்.ஆச்சார்யாவை [11] சந்தித்தார். ஒரு நேர்காணலில் இவர் மேற்கோள் காட்டியது இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது.[10] இவர் தனது 30 வயதில் மீண்டும் குச்சிபுடியை ஆடத் தொடங்கினார். இந்திய பாரம்பரிய நடன வகைகளான, பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் கோயில் சடங்கு குறித்த நடனங்களில், தமது பயிற்சியைக் கொண்டிருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மறைந்த குரு சி.ஆர். ஆச்சார்யா, மறைந்த வேதாந்தம் பிரகலாத சர்மா, பத்மஸ்ரீ வேதாந்தம் சத்யநாராயண சர்மா, பரதக்கலா பிரபூரணா, கொரட நரசிம்ம ராவ் போன்ற ஒரு ஆரம்ப பழம்பெரும் குருக்களின் கீழ் சிறு வயதிலிருந்தே பயிற்சி பெற்றுள்ளார். அதனால் குச்சிபுடி நிபுணர் என அழைக்கப்படுகிறார்.
குச்சிபுடி கலையைப் பற்றிய ஆழமான மற்றும் ஒருங்கிணைந்த புரிதலுக்காக மட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் ஒரு நடிகையாகவும், நடன இயக்குநர், நடன-கல்வியாளர் மற்றும் நடன-சிகிச்சையாளராகவும் இவர் பணியாற்றியதற்காக வைஜயந்தி கொண்டாடப் படுகிறார்.
நிகழ்ச்சிகள்
[தொகு]அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச குச்சிபுடி மாநாடு, ஐக்கிய ராச்சியத்தில் மிலாப் திருவிழா, ஜெர்மனியில் ஓரியண்டல் நடனத் திருவிழா, ஆப்பிரிக்காவில் இந்திய விழா, மலகாவில் இந்தியா திரைப்பட விழா, கொரியாவில் அப்பன் நடன விழா, இத்தாலியில் ஒலிம்பிக் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச கன்னட மாநாடு, எகிப்தில் சர்வதேச நடனம் மற்றும் இசை விழா, மால்டா, துனிசியா, இஸ்ரேலில் கார்மியேல் நடன விழா உள்ளிட்ட பல சர்வதேச விழாக்களில் வைஜயந்தியின் பணிகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, இத்தாலி, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், பெர்லின், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளில் விரிவுரை-செயல்திறன் மற்றும் பட்டறைகளை நடத்தியுள்ளார்.
இவர் பிரபல குச்சிபுடி நடன கலைஞரும், தனது மகளுமான பிரதீக்சா காசியுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை வழங்குகிறார். இந்த தாயும் மகளும் உலகெங்கிலும் உள்ள குச்சிபுடி நடனக் கலைஞர்களில் இந்தியாவைச் சேர்ந்த சிறந்த ஜோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்கள்.[12]
குறிப்புகள்
[தொகு]- ↑ "VYJAYANTHI KASHI (Kuchipudi)". Associationsargam.com. Retrieved 25 March 2013.
- ↑ "dancing to eternal bliss". Vyjayanthi Kashi. Retrieved 25 March 2013.
- ↑ "Gubbi Veeranna". www.ourkarnataka.com. Archived from the original on 8 பிப்ரவரி 2012. Retrieved 27 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Reputed Kuchipudi Dancer". kuchipudikalakar.blogspot.co.at. Retrieved 27 March 2012.
- ↑ "Shambhavi School of Dance". Schoolofkuchipudi.com. Retrieved 25 March 2013.
- ↑ "Chair Person". timesofindia.indiatimes.com. Retrieved 27 March 2012.
- ↑ "Chairperson". www.thehindu.com. Retrieved 27 March 2012.
- ↑ ": : : Karnataka Sangeetha Nrutya Academy : : :". Karnatakasangeetanrityaacademy.org. Archived from the original on 28 செப்டம்பர் 2013. Retrieved 25 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chairperson". Vyjayanthikashi.com. 24 June 2012. Archived from the original on 27 September 2013. Retrieved 25 March 2013.
- ↑ 10.0 10.1 "Interview with the hindu". www.hindu.com. Archived from the original on 28 செப்டம்பர் 2013. Retrieved 27 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "c-r-acharya". kuchipudinotes.wordpress.com. Retrieved 27 March 2012.
- ↑ "Kuchipudi Dancers from India". www.thehindu.com. Retrieved 2014-11-14.