உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதீக்சா காசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதீக்சா காசி
பிறப்புபெங்களூர்
பெங்களூரு, ஒடுக்கதூர் மட் ஹாலில் பிரதீக்சா காசியின் நிகழ்ச்சி [பட உதவி: அஞ்சலி ரெட்டி ஜே]
பெங்களூரு, ஏடிஏ ரங்கமந்திரா, ராசா சஞ்சே நிகழ்ச்சியில் பிரதீக்சா காசி [பட உதவி: அஞ்சலி ரெட்டி ஜே]

பிரதீக்சா காசி (Prateeksha Kashi) ஒரு இந்திய குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். குச்சிபுடி என்பது, இந்தியாவிலுள்ள ஆந்திர பிரதேசத்தின் பாரம்பரிய நடன வடிவம் ஆகும். இவர், முனைவர் குப்பி வீரண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர். [1] இவர், தனது ஐந்து வயதில் நடனமாடத் தொடங்கினார். குச்சிபுடியில் அவரது தாயார் மற்றும் குரு திருமதி. வைஜயந்தி காசியிடம் பயிற்சி பெற்றார். [2] [3] திருமதி வைஜயந்தி காசி, ஒரு பிரபலமான குச்சிபுடி நடனக் கலைஞர், புகழ்பெற்ற கலைஞர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். மேலும், இவர், சாம்பவி ஸ்கூல் ஆஃப் டான்ஸின் கலை இயக்குனர் ஆவார். [4] கர்நாடக சங்கீத நிருத்ய அகாதமியின் தற்போதைய தலைவராகவும் வைஜயந்தி காசி உள்ளார் [5] [6]

நடனப்பயிற்சி[தொகு]

பிரதீக்சா காசி கணினி அறிவியல் பொறியாளர் ஆவார். [7] இவரது ஆர்வம் நடனத்திற்கு அப்பால் நடிப்பு, கற்பித்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் நட்டுவாங்கம் பயிற்சி ஆகியவற்றில் இருந்தது. நட்டுவாங்கம் என்பது, ஒரு பாரம்பரிய இந்திய நடனப் பாடலை நடத்தும் கலை ஆகும். இது லயம் அல்லது தாள உணர்வைக் குறிக்கிறது, இது இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தின் மிக முக்கியமான அம்சமாகும். மேலும், இவர், குச்சிபுடியைப் பரப்புவதற்கும், அதை நோக்கி இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் மிகுந்த ஆர்வத்துடன், பெங்களூரில் ஆர்வமுள்ள நடனக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

தொழில்நுட்பம் குறித்த பேட்டி[தொகு]

நோ யுவர் ஸ்டார்என்கிற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், [8] தொழில்நுட்பம் கலைக்கு எவ்வாறு பயனளித்தது என்று பிரதீக்சா காசி மேற்கோள் காட்டினார்- "ஒரு வகையில் எனது தொழில்நுட்பப் படிப்பு எனது கலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது, மேலும் நடனக் கலைஞராக எனது வாழ்க்கையில் நீண்ட தூரம் வருகிறது. தொழில்நுட்ப ஆர்வலராக இருப்பது மற்றும் தொழில்நுட்பம் வழங்கும் திறனை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்; இசை, ஒளியமைப்பு, ஊடகம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் செயல்திறனின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரந்த அளவை அடையலாம், கற்றுக்கொள்ளலாம் அல்லது யோசனைகளை செயல்படுத்தலாம். இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சி எப்போதுமே கலைக்கு சாதகமாக இருக்கிறது! " என்று கூறியுள்ளார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

பிரதீக்சா காசி, இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள பெங்களூரில் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குச்சிபுடி நடனக் கலைஞரான வைஜயந்தி காசி மற்றும் விஜய் காசியின் மகள் ஆவார். இவரது தந்தை விஜய் காசி, ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். [9]

பிரதீக்சா காசி, மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, மகாபாரதத்திலிருந்து அம்பே என்ற நடன நாடகம் முழுவதையும் பாடி நடனமாடினார் என்று கூறப்படுகிறது. உண்மையில், இவரது ஐந்து வயதில் இவருக்கு மேடை அறிமுகமானது. இவரது தாயார் ரமண மகரிஷி நிறுவனத்தில், ஒரு நிகழ்ச்சி நடத்தும்போது மேடையில் ஓடி, சாம்பவி ஸ்கூல் ஆஃப் டான்ஸின் மூத்த நடனக் கலைஞர்களுடன் ஒத்திசைந்து நடனமாடத் தொடங்கினார். [10] அப்போதிருந்து, இவர் தனது தாயார் மற்றும் குருவான, திருமதி வைஜயந்தி காசியிடம் குச்சிபுடியில் பயிற்சி பெற்றார். தனது பதின்மூன்றாவது வயதில், குச்சிபுடி நடனத் தேர்வில் பிரதீக்சா ஒரு உயர்ந்த மதிப்புடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். [11] பிரதீக்சா காசி தனது படிப்பிலும் சிறந்து விளங்கினார்; தனது பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் முதலிடம் பெற்றதற்காக தங்கப் பதக்கம் பெற்றார். [12] [13]

பிப்ரவரி 20, 2009 அன்று பிரதீக்சா காசி தனது "ரங்கபூஜா" என்கிற நடன நிகழ்ச்சியைச் செய்தார், அதன் பின்னர் இவர் ரைசிங் ஸ்டார் என்று அங்கீகரிக்கப்பட்டார். [14]

2012இல், பிரதீக்சா காசி தனது தாய் மற்றும் குரு வைஜயந்தி காசி, உடன் "நவரச" நிகழ்ச்சியை நடத்துகிறார் [உபயம்: அஞ்சலி ரெட்டி ஜே

குறிப்புகள்[தொகு]

 1. "Gubbi Veeranna". www.ourkarnataka.com. Archived from the original on 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் 2012-03-27.
 2. "dancing to eternal bliss". Vyjayanthi Kashi. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
 3. "VYJAYANTHI KASHI (Kuchipudi)". Associationsargam.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
 4. "Shambhavi School of Dance". Schoolofkuchipudi.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
 5. ": : : Karnataka Sangeetha Nrutya Academy : : :". Karnatakasangeetanrityaacademy.org. Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
 6. "Chairperson". Vyjayanthikashi.com. 2012-06-24. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
 7. "Computer Science Engineer". www.bmsce.in. Archived from the original on 2013-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
 8. "Prateeksha Kashi: Dancing Away to Glory". www.KnowYourStar.com. Archived from the original on 2020-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
 9. "VYJAYANTHI KASHI (Kuchipudi)". Associationsargam.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
 10. "A Graded Artist in Doordarshan Kendra". www.sehernow.in. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
 11. "Scholarship from Govt". www.deccanherald.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
 12. "Convocation Gold Medal". www.deccanheraldepaper.com. Archived from the original on 29 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-12.
 13. "Convocation Gold Medal" (PDF). www.deccanheraldepaper.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-12.[தொடர்பிழந்த இணைப்பு]
 14. "Prateeksha Kashi Rangapooja". www.sehernow.in. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prateeksha Kashi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீக்சா_காசி&oldid=3563473" இலிருந்து மீள்விக்கப்பட்டது