வைக்கோல் அறுவடை திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவ்ல் குட் (வைக்கோல் அறுவடை திருவிழா)
கடைபிடிப்போர்பாரம்பரிய மிசோரம் மக்கள்
வகைமிசோர விழாக்கள்
முக்கியத்துவம்அறுவடை திருவிழா. 1 day long

வைக்கோல் அறுவடை திருவிழா என்பது இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறும் மிசோரம் திருவிழாவாகும். [1] மிசோரம் மக்களின் மொழியில் பாவ்ல் குட் என்று அழைக்கப்படும். பாவ்ல் என்றால் "வைக்கோல்" என்று அர்த்தம். எனவே பாவ்ல் குட் என்றால் வைக்கோல் அறுவடை திருவிழா என்று பொருள்படும். இது பொதுவாக டிசம்பரில் அறுவடை முடிந்த பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. [2] இது மிசோரம் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்,

தோற்றம்[தொகு]

கி.பி. 1450 முதல் 1700 வரையிலான காலப்பகுதியில் மிசோரம் மக்கள் தியாவ் நதிக்கு அருகில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இத்திருவிழாவின் தோற்றம் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. நான்காம் ஆண்டில் அமோக விளைச்சல் ஏற்பட்டது. இவ்வாறு ஏராளமான விளைச்சலைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் செயலாக மக்கள் இந்த வைக்கோல் அறுவடை திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

கொண்டாட்டம்[தொகு]

திருவிழாவின் போது சாவ்ங்நாட் எனப்படும் சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த சடங்கின் முக்கியமே இறைச்சி மற்றும் முட்டை சேர்க்கப்பட்டுள்ள விருந்து தான். சாவ்ங்நாட் சடங்கின் போது ஒவ்வொரு குடும்பத்தின் தாயும் அவரது குழந்தைகளும் இந்த திருவிழாவின் நோக்கத்திற்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட நினைவு மேடையில் அமர வைக்கப்பட்டு முதலாவது தாய் தனது குழந்தைகளுக்கு இறைச்சி மற்றும் முட்டைகளை ஊட்டுகிறார், பின்பதாக குழந்தைகள் தங்கள் தாய்க்கு முட்டை மற்றும் இறைச்சியுடன் உணவளிக்கிறார்கள். இறைவன் இம்மக்களை குழந்தைகளாக கருதி உணவூட்டுவதை நினைவு கூர்ந்து இந்த சடங்கு கடைபிடிக்கப்படுகிறது.. [3]

மேற்கோள்கள்[தொகு]