வே. செல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. செல்லையா (பிறப்பு: பிப்ரவரி 27, 1944) மலேசியாவின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மேலும், பல சமுதாய, இலக்கிய நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர். பெட்டாலிங் தமிழர் சங்கத்தின் அமைப்பாளர்; இரண்டாவது மலேசிய எழுத்தாளர் தேசிய மாநாட்டின் நிர்வாக அலுவலர். தமிழ் இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • "பிஞ்சு மனம்" (1993)
  • "புதியதோர் உலகம் செய்வோம்" (1998)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._செல்லையா&oldid=3229339" இலிருந்து மீள்விக்கப்பட்டது