வேளாண்மையில் பல்லுயிர்ப் பெருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்முகத்தன்மை இல்லாத ஒற்றைப் பயிரிடல் பேரளவில் உள்ள வேளாண் நிலங்கள்.

வேளாண்மையில் பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity in agriculture)என்பது வேளாண் நிலத்தில் காணப்படும் பல்லுயிர் பெருக்கத்தின் அளவீடு ஆகும். பல்லுயிர்ப் பெருக்கம் என்பது ஒரு பகுதியில் உயிரியல் அமைப்பின் அனைத்து நிலைகளிலும் காணப்படும் உயிரினங்களின் மொத்த பன்முகத் தன்மையாகும். இது பல்வேறு வகையான சுற்றுச்சூழல் கட்டமைப்பை ஏற்கும் பன்முக வாழ்விடங்களால் வகைப்படுத்தப்படுகிறது.[1]வேளாண் பகுதிகளில் , மாறுபட்ட நிலப்பரப்புகள் இழக்கப்பட்டு , பூர்வீக தாவரங்கள் பயிரிடப்பட்ட பயிர்களால் மாற்றப்படுவதால் பல்லுயிர் பெருக்கம் குறைகிறது.[1] வேளாண்மையில் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது வேளாண் நிலங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் சுற்றுச்சூழல் சேவைகளை மீட்டெடுப்பதன் வழி பண்ணைகளின் நிலைப்புறும்தன்மை அதிகரிக்கும்.[2] வேளாண் பல்லுயிர்ப் பெருக்கம் வேளாண் சூழலியலின் ஒரு கூறாக இருப்பதால் வேளாண் சூழலியல் மீட்டெடுப்புச் செயல்முறையின் வழி வேளாண்மையில் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க முடியும்.

பல்லுயிர்ப் பெருக்கம் என்பது பன்முகத் தன்மையால் விவரிக்கப்படும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பில் உயிரியல், உயிரற்ற பன்முகத்தின் அளவீடு ஆகும். உலகளாவிய உணவுத் தேவைகள் அதிகரித்ததாலும் பிரபலமான பயிர்களின் வெற்றிக்குப் பிறகும் வேளாண்மையில் பல்லுயிர் இழப்பு அதிகரித்து வரும் சிக்கல் இருந்து வருகிறது.[3][4] பன்முகத்தன்மை இழப்பு வேளாண் நிலங்களில் பல்லுயிரினங்கள் குறைகிறது.[5] வேளாண் சேவைகளை வழங்கும்போது பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குவதில் வேளாண்மையில் பல்லுயிர் பெருக்கம் தேவையாகும்.[6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 (in en) Biodiversity in Agriculture: Domestication, Evolution, and Sustainability. Cambridge University Press. 2012-02-23. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-76459-9. https://books.google.com/books?id=jbuL_9dMxGUC&q=biodiversity&pg=PA5. 
  2. "How to implement biodiversity-based agriculture to enhance ecosystem services: a review" (in en). Agronomy for Sustainable Development 35 (4): 1259–1281. October 2015. doi:10.1007/s13593-015-0306-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1773-0155. 
  3. "Farmland biodiversity: is habitat heterogeneity the key?" (in en). Trends in Ecology & Evolution 18 (4): 182–188. April 2003. doi:10.1016/S0169-5347(03)00011-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0169-5347. 
  4. "Increasing homogeneity in global food supplies and the implications for food security". Proceedings of the National Academy of Sciences of the United States of America 111 (11): 4001–4006. March 2014. doi:10.1073/pnas.1313490111. பப்மெட்:24591623. Bibcode: 2014PNAS..111.4001K. 
  5. "Effects of farmland heterogeneity on biodiversity are similar to—or even larger than—the effects of farming practices" (in en). Agriculture, Ecosystems & Environment 288: 106698. February 2020. doi:10.1016/j.agee.2019.106698. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-8809. 
  6. "Farming for Ecosystem Services: An Ecological Approach to Production Agriculture". BioScience 64 (5): 404–415. May 2014. doi:10.1093/biosci/biu037. பப்மெட்:26955069. 

மேலும் படிக்க[தொகு]