வேலைப் பளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலைப் பளு-W (Work load-W ) என்பது தொலைக் கதிர் மருத்துவத்திற்கான கருவி பயன்படும் நிலையில் ஒரே மையத்தில் (Isocentre ) 100 சென்டி மீட்டர் தொலைவில் ஒரு வாரகாலத்தில், கருவியின் இலக்கிலிருந்து மருத்துவத்திற்காகப் பெறப்படும் மொத்தக் கதிர் வீச்சளவாகும். இதுவே வேலைப் பளு எனப்படுகிறது. வாரத்திற்கு 5 நாட்களும், நாள் ஒன்றிற்கு 8 மணி நேரமும் பணி செய்யும் போதுள்ளவாறு இது கணக்கிடப்படுகிறது.

எடுத்துக் காட்டு: நாள் ஒன்றிற்கு 60 நோயாளிகளுக்கு மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது என்று கொள்வோம். சராசரியாக ஒரு நோயாளிக்கு 2 கிரே (200 ரேட்) அளவு கதிர் ஏற்பளவு கொடுக்கப்படுகிறது என்றும் கொள்வோம். இப்போது 5 நாட்களில் தரப்படும் கதிர் ஏற்பளவு = 5* 2* 60 =600 கிரே (60000 ரேட்). இதுவே வேலைப் பளு ஆகும். உயரளவாக 1000 கிரே (1000,00 ரேட்) என்று எடுத்துக்கொண்டு கணக்கிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைப்_பளு&oldid=2746187" இலிருந்து மீள்விக்கப்பட்டது