வேரெண்
வேரெண் (radix) அல்லது அடிமானம் (base) என்பது, எந்தவோர் எண்குறி முறைமையிலும், அந்த இலக்கஞ்சார்ந்த எண்குறி முறைமையின் சுழி உள்ளிட்ட தனித்த மொத்த எண்களின் கணத்தைக் குறிக்கும். எடுத்துகாட்டாக, பதின்ம முறைமையில் வேரெண் பத்து. ஏனெனில், இது 0 முதல் 9 வரையிலான பத்து எண்களைப் பயன்படுத்தும்.
எந்தவொரு செந்தர இலக்க எண்குறி முறைமையிலும், x எனும் எண்ணும் அதன் அடிமானமான y எனும் எண்ணும் வழக்கமாக என எழுதப்படும். இங்கு எண்ணின் பின்னொட்டான, அடிமானமாகப் பத்து கருதப்பட்டாலும் எழுதப்படுவதில்லை. ஏனெனில், இதுவே மதிப்பை வெளியிடும் மிகப் பொதுவான வழிமுறையாகும். எடுத்துகாட்டாக, பதின்ம முறைமையில் என்பது நூறு எனும் எண்னைக் குறிக்கும். அடிமானம் 2 ஆகும் இரும முறைமையில் என்பது நான்கு எனும் எண்ணைக் குறிக்கும்..[1]
வேர்ச்சொல்லியல்
[தொகு]Radix எனும் இலத்தினச் சொல்லின் பொருள் வேர் என்பதாகும்". இது எண்ணியலில் அடிமானம் என்பதன் இணைச்சொல்லாகும்.இதைத் தமிழில் வேரெண் எனலாம்.
எண்குறி முறைமைகளில்
[தொகு]அடிமானம் 13 ஆகவுள்ள எண்குறி முறைமையில் 398 எனும் எண்சரம் எனும் எண்ணைக் குறிக்கும்.
மிகப் பொதுவாக, அடிமானமாக b (b > 1) உள்ல எண்குறி முறைமையில், எனும் எண்சரம் எனும் எண்ணைக் குறிக்கும். இங்கு, ஆகும்.[1]
கீழே வழக்கில் உள்ள எண்குறி முறைமைகள் தரப்படுகின்றன.
அடிமானம்/வேரெண் | பெயர் | விவரணம் |
---|---|---|
10 | பதின்மைலக்க முறைமை | உலக அளவில் எண்ணியலில் மிகப் பொதுவாகப் பயன்படும் எண்முறைமை இதுவே. 0 முதல் 9 வரையுள்ள இதன் எண்குறிகள் பெரும்பாலான எந்திர எண்ணிகளில் பயன்படுகின்றன. |
12 | பதினிரும இலக்க முறைமை | இது 2, 3, 4, 6 ஆகிய எண்களால் எளிதாக வகுக்க முடிவதால் இம்முறைமை பரிந்துரைக்கப்படுகிறது. மரபாக, பொருள்களை டஜன்களிலும் குரோசுகளிலும் எண்ணப் பயன்பட்டது. |
2 | இரும இலக்க முறைமை | அடிமானமாக 2ஐக் கொண்ட இந்த இரும முறைமை அனைத்துக் கணினிகளின் உள்ளே பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படும் இரு எண்களாவன "0", "1" ஆகியனவாகும். இவை முறையே அணையும், இனையும் நிலைமாற்றிகளால் அமைகின்றன. மேலும் இது அனைத்து இலக்கமுரை எண்ணிகளிலும் பயன்படுகிறது. |
16 | பதினறும இலக்க முறைமை | இந்த பதினறும முறைமை கணிப்புக்காக பயன்படுகிறது. இதில் பயன்படும் 16 எண்களாவன "0–9" ஆகியவற்றோடு, "A–F" அல்லது "a–f" அகியன பின்னமைகின்றன. |
8 | எண்ம இலக்க முறைமை | இந்த முறைமை எப்போதாவது கணிப்புக்காகப் பயன்படுகிறது. இதில் பயன்படும் எண்களாவன "0–7" ஆகியன வாகும். |
20 | இருபதின்மம் | எண்ணுவதற்குப் பல பண்பாடுகளில் இன்றும் நிலவும் மரபான எண்குறி முறைமை ஆகும். |
60 | அறுபதின்ம இலக்க முறைமை | இது சுமேரியாவில் தோன்றி, பாபிலோனியாவுக்குப் பரவியது.[2] இன்று இது வட்ட ஆய முறைகளில் பாகைகள், துளிகள், நொடிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. மேலும் கால அளவைகளான மணி, மணித்துளி, நொடிகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. |
முழுப்பட்டியலுக்கு, காண்க, எண்குறி வகைகளின் பட்டியல்.
இரும முறைமைக்கான சுருக்கமான வழிமுறையாக, எண்ம, பதினறும இலக்க முறைமைகள் பயன்படுகின்றன. 16 2 இன் 4ஆம் படியாக அமைவதால், ஒவ்வொரு பதினறும எண்ணும் 4 இரும எண்களுக்குச் சமமாகும். எடுத்துகாட்டாக, பதினறும 7, 8 ஆகியவை இரும முறைமையில் 111, 1000 ஆகும். 8 எனும் எண் 2 இன் முப்படியாக அமைவதால், ஒவ்வோர் எண்ம எண்ணும் இத்தகையதோர் உறவை ஒவ்வொரு இரும எண்ணுக்கும் பெற்றுள்ளது.
வேரெண்கள் எப்பொதுமே இயல் எண்களாகும். என்றாலும், வேறு இயல் எண்ணல்லாத இலக்க முறைமைகளும் வழக்கில் உள்ளன. எடுத்துகாட்டு, . தங்க விகிதம் அடிமானம். இதன் வேரெண் முழு எண்ணல்லாத இயற்கணித எண்ணாகும்.[3] and negative base (whose radix is negative).[4]
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 M. Morris Mano and Charles Kime (2014). Logic and computer design fundamentals (4th ed.). Harlow: Pearson. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-292-02468-4.
- ↑ Bertman, Stephen (2005). Handbook to life in ancient Mesopotamia (Paperback ed.). Oxford [u.a.]: Oxford Univ. Press. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-019-518364-1.
- ↑ Bergman, George (1957). "A Number System with an Irrational Base". Mathematics Magazine 31 (2): 98–110. doi:10.2307/3029218. http://www.jstor.org/discover/10.2307/3029218?sid=21105280456741&uid=4&uid=2129&uid=2&uid=70.
- ↑ William J. Gilbert (September 1979). "Negative Based Number Systems". Mathematics Magazine 52 (4): 240–244. https://www.math.uwaterloo.ca/~wgilbert/Research/GilbertNegBases.pdf. பார்த்த நாள்: 7 February 2015.