வேம்புடையார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார் கொவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) வட்டத்திற்கு உட்பட்ட கருப்பம்புலம் அருகில் உள்ள கடிநெல்வயல் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.இக்கோவில் இந்த கடிநேல்வயலை சுற்றியுள்ள பல நூறு குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இக்கோயிலைக் குலதெய்வக் கோயிலாகக் கொண்ட மக்கள் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். சிலர் தொழில் நிமித்தமாக உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.வேம்புடியாயார் கோயிலுக்கு உட்பட்டே கோயில் குளமும் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை என்பதும் மற்றுமொரு சிறப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்புடையார்_கோவில்&oldid=1753855" இருந்து மீள்விக்கப்பட்டது