வேதி வினைக்குழு ஒப்புமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதி வினைக்குழு ஒப்புமைகள் (Functional analogs) என்பவை வேதியியல் மற்றும் மருந்தியலில் ஒரே மாதிரியான இயற்பியல், வேதியியல், உயிர்வேதியியல் அல்லது மருந்தியல் பண்புகளைக் கொண்டுள்ள வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். வேதி வினைக்குழு ஒப்புமைகள் ஒத்த வேதியியல் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை. [1] மார்பின், எராயின், பெண்டானைல் போன்ற சேர்மங்கள் மருந்து வகை வேதி வினைக்குழு ஒப்புமைகளுக்கு சில எடுத்துக் காட்டுகளாகும். இவை ஒரே மாதிரியான செயல்முறைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் பெண்டானைலின் கட்டமைப்பு மற்ற இரண்டு சேர்மங்களின் கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Martin, Yvonne C.; Kofron, James L.; Traphagen, Linda M. (2002). "Do Structurally Similar Molecules Have Similar Biological Activity?". Journal of Medicinal Chemistry 45 (19): 4350. doi:10.1021/jm020155c. பப்மெட்:12213076. 
  2. Mutschler, Ernst; Schäfer-Korting, Monika (2001) (in German). Arzneimittelwirkungen (8 ). Stuttgart: Wissenschaftliche Verlagsgesellschaft. பக். 214f, 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-8047-1763-2.