வேட்டையாடும் விலைமதிப்பு
Appearance
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு பொருளின் சந்தை மதிப்பில் இருந்து குறைந்த விலைக்கு விற்று சந்தை ஆக்கிரமிப்பை செய்து, போட்டியாளர்களை வெளியேற்றும் நோக்குடன் செய்யப்படும் விலைமதிப்பீட்டை predatory pricing என்று ஆங்கிலத்தில் குறிப்பர். தமிழில் வேட்டையாடும் விலைமதிப்பு எனலாம். போட்டியாளர்களை வெளியேற்றி, சந்தை ஆக்கிரமிப்பைச் செய்த பின்னர் தாம் விரும்பியபடி விலையைக் கூட்டி விற்கக்கூடியவாறு ஒரு monopoly ஏதுவாக்க இந்த ஏற்பாடு உதவுகின்றது. பொதுவாக பெரும் முதலீடு வசதி அல்லது சந்தையைக் கட்டுப்படுத்த வல்ல நிறுவனங்களே இந்த செயற்பாட்டில் ஈடுபடக் கூடியதாக இருக்கிறது. இது ஐக்கிய அமெரிக்கா உட்பட அனேக நாடுகளில் ஒரு குற்றச் செயலாகும்.