வெற்றி நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றி தினம்
Vijay Diwas
நாள்16 திசம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையன
டாக்காவில் 16 திசம்பர், 1971ல் இந்திய இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பாகிஸ்தான்  சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பாகிஸ்தான் லெப்டினன்ட். ஜெனரல் ஏ. ஏ. ஏ. கே. நியாசி

வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து  நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.

வெற்றி தினம் 2014ல் விசாகப்பட்டினம் தியாகிகள் போர் நினைவிடத்தில் துணை அட்மிரல் பிமால் வர்மா அஞ்சலி செலுத்துகிறார்

இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லி இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் திசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர். "[1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandrasekhar, Rajeev (18 December 2012). "Don't Let Down Our Heroes". Mail Today. Archived from the original on 3 டிசம்பர் 2013. https://web.archive.org/web/20131203033222/http://rajeev.in/News/Dont_Let_Down_Our_Heroes/Mail_Today.html. பார்த்த நாள்: 15 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றி_நாள்_(இந்தியா)&oldid=3599415" இருந்து மீள்விக்கப்பட்டது