உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி (HRSG) என்பது வேறு ஒரு வெப்ப கலனில் இறுந்து வரும் மீள் வெப்பத்தைப் (Exhaust gas) பயன்படுத்தி நீராவி தயாரிக்கும் இயந்திரம்.


வகைகள்[தொகு]

வகைகள்

வெளிவரும் வளிமத்தின் படி(Exhaust gas)[தொகு]

செங்குத்து வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி (Vertical)[தொகு]

 • இதில் வெளிவரும் வளிமம் (Exhaust gas) செங்குத்தாகவும் , நீர் கிடைமட்டமாகவும் செல்லும்.

கிடைமட்ட வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி(Horizontal)[தொகு]

 • இதில் வெளிவரும் வளிமம் (Exhaust gas) கிடைமட்டமாகவும் , நீர் செங்குத்தாகவும் செல்லும்.

அழுத்த மட்டத்தின் படி(Pressure level)[தொகு]

ஒற்றை அழுத்த வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி(single)[தொகு]
 • இதில் வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி ஒரே ஒரு நீராவி உருளையை கொண்டுள்ளது மேலும் நீராவி ஒற்றை அழுத்தத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பல்திற அழுத்த வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி(multiple)[தொகு]
 • இதில் வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி இரண்டு அல்லது மூன்று நீராவி உருளையை கொண்டுள்ளது மேலும் நீராவி பல்திற அழுத்தத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது(மிகை அழுத்தம் , இடைநிலை அழுத்தம் , குறை அழுத்தம்)

முக்கிய பாகங்கள்[தொகு]

செங்குத்து வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி (Vertical)
கிடைமட்ட வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி(Horizontal)

1. ஊட்டு நீர் முன் சூடாக்கி (Economizer).

 • இந்த அமைப்பு ஊட்டி நீர் குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஊட்டி நீரை ஓரளவிற்கு சூடுபடுத்தி உயரழுத்த உருளைக்குச் செலுத்துகிறது.

2. ஆவியாக்கக் கலம் (Evaporator).

 • இதன் “நுழைவு முனை” உருளைகளின் அடிப்பகுதியுடனும், “வெளியேற்றி முனை” உருளைகளின் நடுப்பகுதியுடனும் குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இது உயரழுத்த உருளை மற்றும் குறைவழுத்த உருளைகளுக்காக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.உருளைகளின் அடிப்பகுதியில் உள்ள சூடான நீரினை சற்று நீராவியாக மாற்றி, நீரும் நீராவியும் (SATURATED STEAM) கலந்த கலவையாக உருளைகளின் நடுப்பகுதிக்கு தானியங்கி சுழற்சி முறையில் செலுத்தும் வண்ணம் இது அமைக்கப்பட்டுள்ளது.

3. மீ வெப்பமைவு(superheater).

 • இந்த அமைப்பின் “நுழைவு முனை” உயரழுத்த உருளையின் மேற்பகுதியுடன் குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். உயரழுத்த உருளையில் உள்ள நீரும் நீராவியும் கலந்த கலவையானது (SATURATED STEAM) இந்த அமைப்பின் வழியாகச் செல்லும் போது, மேலும் சூடாக்கப்பட்டு அழுத்தப்பட்ட நீராவியாக மாற்றப்பட்டு “வெளியேற்றி முனை” வழியாக நீராவிச்சுழலிக்குள் செலுத்தப்படும்.

4. நீர் முன்சூடாக்கி (water preheater).

 • இது நீரை ஊட்டு நீர் முன் சூடாக்கிக்கு (Economizer) அனுப்பும் முன் சற்று சூடாக்கி அனுப்பும் பகுதி.

5. உருளை(DRUM)

 • இதில் உயரழுத்த உருளை(HP drum) மற்றும் குறைவழுத்த உருளை (LP drum) என்று இரண்டு வகையான உருளைகள் உள்ளன. உயரழுத்த உருளையானது வெப்ப மீட்பு நீராவி உருவாக்கி தொகுப்பிற்கான நீர் மற்றும் நீராவியை தொகுத்து வழங்கும் பணிக்காகவும், குறைவழுத்த உருளையானது நீர் மற்றும் நீராவியின் மறு சுழற்சி பணிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

6. உள்ளீட்டு குடுவை (Inlet duct).

 • இது எரிவளிச் சுழலில் இருந்து வரும் அனல் வளியை(exhaust gas) வெப்ப மீட்பு நீராவி உருவாக்கிக்குள் அனுப்பும் நுழைவு வாயில் போன்ற அமைப்பு ஆகும்.

7. உறை (Casing).

 • ஆனது, ஊட்டு நீர் முன் சூடாக்கி(ECONOMIZER),ஆவியாக்கக் கலம்(EVOPORATOR),மீ வெப்பமைவு(SUPER HEATER) ஆகிய அமைப்புகள் அடங்கிய தொகுப்பினை சூடேற்றுவதற்காக பயன்படும் அனல் வளியை(exhaust gas) வெளியேறவிடாமல் அத்தொகுப்பினைச் சுற்றிலும் கவசமாய்ப் பயன்படும் ஓர் அமைப்பு ஆகும்.

8. வெளியீட்டு குடுவை ( Outer duct).

 • இது “வெப்ப மீட்பு நீராவி உருவாக்கியினுள் பயன்படுத்தப்பட்ட அனல் வளியை வெளியேற்றப்பயன்படும் அமைப்பு.

9. ஓசையடக்கி (Silencer).

 • ஓசையடக்கி வெளியீட்டு குடுவையுடன் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். மிகுந்த இரைச்சலுடன் வெளியேறும் அனல் வளியின் இரைச்சலைக் குறைப்பது இதன் பணியாகும்.

10.புகைக்கூண்டு (Chimeny).

 • பயன்படுத்தப்பட்ட அனல் வளியானது புகையாக வெளியேறும்பொழுது, அது சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்க மிக உயரத்தில் வெளியேற்ற புகைக்கூண்டு பயன்படுகிறது.

இயங்கும் முறை[தொகு]

 • எரிவளிச் சுழலியிலிருந்து வெளிவரும் அனல் வளியானது(exhaust gas) வெப்ப மீட்பு நீராவி உருவாக்கின் வெளியீட்டுக்குடுவை வழியாக உள்ளே நுழைந்து அனைத்து வெப்ப மாற்றிகளையும் (Heat exchangers) கடந்து வெளியீட்டுக்குடுவை வழியாகச் சென்று புகைக்கூண்டு மூலம் வெளியேற்றப்படும்.
 • இச்சமயத்தில், ஊட்டி நீர்(FEED WATER) ஆனது ஊட்டு நீர் முன் சூடாக்கில்( Economizer) அனல் வளியால்(exhaust gas) சற்று சூடாக்கப்பட்டு உயரழுத்த உருளையினைச் சென்றடையும்.
 • உயரழுத்த உருளையினைச்(HP Drum) சென்றடைந்த நீரானது மீண்டும் உருளையின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள குழாய்களின் வழியாக ஆவியாக்கக் கலனைச் (Evaporator) சென்றடையும். ஆவியாக்கக் கலனைச் (Evaporator) சென்றடைந்த நீரானது அனல் வளியால் மேலும் சூடாக்கப்பட்டு நீரும் நீராவியும் (SATURATED STEAM) கலந்த கலவையாக மாறி சற்று அழுத்ததுடன் மீண்டும் உயரழுத்த உருளைக்கே(HP drum) சென்றடையும். இது ஒரு ‘தானியங்கிச்” சுழற்சி முறை ஆகும்.
 • இவ்வாறு, உயரழுத்த உருளையைச் சென்றடைந்த நீரும் நீராவியும் கலந்த கலவையில் (SATURATED STEAM) நீரானது உருளையின் அடிப்பகுதியையும், நீராவியானது உருளையின் மேற்பகுதியையும் சென்றடையும். உருளையின் அடிப்பகுதியில் உள்ள நீர் மீண்டும் ஆவியாக்கக் கலனுக்குச் (Evaporator) செல்லும், மேற்பகுதியில் உள்ள நீராவியானது அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் வழியாக மீ வெப்பமைவு(super heater)க்குள் செல்லும்.
 • இந்த மீ வெப்பமைவுனுள் (super heater) நீராவியானது மேலும் சூடாக்கப்பட்டு மிகுந்த அழுத்தமாக்கப்படும். இவ்வாறு மாற்றப்பட்ட உயரழுத்த நீராவியானது மீ வெப்பமைவுனுள் இணைக்கப்பட்டுள்ள உயரழுத்த நீராவிக் குழாயின் வழியாகச் சென்று நீராவிச்சுழலிக்குள் புகுந்து அதில் உள்ள இதழ்களைச் சுழற்றும். இவ்வாறு, சுழற்றப்பட்ட இதழ்களால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
   • (குறிப்பு : வெப்ப மாற்றிகளி மீ வெப்பமைவு(super heater)ஆனது அனல் வளிப் பாதையில் முதலாவதாகவும், ஆவியாக்கக் கலம் (Evaporator) ஆனது இரண்டாவதாகவும், ஊட்டு நீர் முன் சூடாக்கி (Economizer) மூன்றாவதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.)