வெண்ணியூர் கரும்பேஸ்வரர் திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம்,புறநானுற்று பாடல் பாடல் பெற்ற
வெண்ணியூர் கரும்பேஸ்வரர் திருக்கோவில்
பெயர்
பெயர்:வெண்ணியூர் கரும்பேஸ்வரர் திருக்கோவில்
அமைவிடம்
ஊர்:கோயில் வெண்ணி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வெண்ணி கரும்பேஸ்வரர், வெண்ணிநாதர், திரயம்பகேஸ்வரர், ராஜபுரீஸ்வரர்
உற்சவர்:-
தாயார்:சௌந்தர நாயகி, அழகிய நாயகி
தல விருட்சம்:நந்தியாவர்த்தம்
தீர்த்தம்:சூர்ய சந்திர தீர்த்தங்கள்
சிறப்பு திருவிழாக்கள்:பங்குனி உத்தரம் வைகாசி விசாகம், சித்திரா பவுர்ணமி, ஆனி திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம்,நவராத்திரி
பாடல்
பாடல் வகை:தேவாரம்,புறநானுற்று பாடல்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,வெண்ணிக்குயத்தியார்

இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில் கோயில் வெண்ணி என்னும் ஓர் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 102 ம் கோயிலாகவும் 274 சிவாலயங்களில் 165ம் கோயிலாகவும் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் கரும்பு காட்டில் சுயம்பாக எழுந்தருளினார் என்ற நம்பிக்கையும் உண்டு.