வெண்கூதாளம்
Appearance
வெண்கூதாளம் பூ நீர்க்கரையில் பூக்கும். அதனைக் கொடியோடு பறித்து ஆண்கள் தம் கால்களில் கழல் போல அணிந்துகொள்வர். மகளிர் கூந்தலில் சூடிக்கொள்வர்.
- சங்ககாலச் செய்திகள்
- நீரோட்டக் கரைகளில் வளரும் இந்தப் பூவைப் பறித்து ஆடவர் கால்களில் வீரக்கழல் போல அணிந்துகொள்வர். [1]
- வெண்கூதாளம் பூ தாழை மரத்தடியில் பூக்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர் சுறா மீனின் கொம்பை நட்டு விழாக் கொண்டாடியபோது அவர்களது மகளிர் தாழைமரத்து அடியில் மலர்ந்திருந்த வெண்கூதாளப் பூவைப் பறித்துத் தலையில் அணிந்திருந்தனர்.[2]
- குன்றுதோறாடும் முருகனைத் தம் சிறுகுடியில் தொண்டகப்பறை முழக்கத்துடன் குரவைக்கூத்து ஆடி வழிபட்ட குன்றக் குறவர் கூட்டத்தில் வேலன் குளவிப் பூவும், வெண்கூதாளப் பூவும் சேர்த்துத் தொடுத்த மாலையை மார்பில் அணிந்திருந்தான். [3]
- வெண்கூதாளம் பூ ஆற்றங்கரை மரத்தில் குருகு அமர்ந்திருப்பது போல மலர்ந்திருக்கும். [4]
- வையை ஆறு சுமந்துவந்த மலர்களில் ஒன்று. [5]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑
நீர்திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண்கூதாளத்து அம் தூங்கு புதுமலர்
ஆர்கழல் புகுவ - குறுந்தொகை 282 - ↑
வீழ்தாழைத் தாள்தாழ்ந்த
வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல் அணங்கினால் ...
உண்டு ஆடி - பட்டினப்பாலை 85 - ↑ திருமுருகாற்றுப்படை 192
- ↑
யாறு சேர்ந்து அன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புனல் நளிசினைக் குருகு இருந்து அன்ன
வண்பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து
அலங்குகுலை அலரி - அகநானூறு 178-9 - ↑ சிலப்பதிகாரம் 13-156