வெண்கூதாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்கூதாளம் பூ நீர்க்கரையில் பூக்கும். அதனைக் கொடியோடு பறித்து ஆண்கள் தம் கால்களில் கழல் போல அணிந்துகொள்வர். மகளிர் கூந்தலில் சூடிக்கொள்வர்.

சங்ககாலச் செய்திகள்
  • நீரோட்டக் கரைகளில் வளரும் இந்தப் பூவைப் பறித்து ஆடவர் கால்களில் வீரக்கழல் போல அணிந்துகொள்வர். [1]
  • வெண்கூதாளம் பூ தாழை மரத்தடியில் பூக்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர் சுறா மீனின் கொம்பை நட்டு விழாக் கொண்டாடியபோது அவர்களது மகளிர் தாழைமரத்து அடியில் மலர்ந்திருந்த வெண்கூதாளப் பூவைப் பறித்துத் தலையில் அணிந்திருந்தனர்.[2]
  • குன்றுதோறாடும் முருகனைத் தம் சிறுகுடியில் தொண்டகப்பறை முழக்கத்துடன் குரவைக்கூத்து ஆடி வழிபட்ட குன்றக் குறவர் கூட்டத்தில் வேலன் குளவிப் பூவும், வெண்கூதாளப் பூவும் சேர்த்துத் தொடுத்த மாலையை மார்பில் அணிந்திருந்தான். [3]
  • வெண்கூதாளம் பூ ஆற்றங்கரை மரத்தில் குருகு அமர்ந்திருப்பது போல மலர்ந்திருக்கும். [4]
  • வையை ஆறு சுமந்துவந்த மலர்களில் ஒன்று. [5]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. நீர்திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
    வெண்கூதாளத்து அம் தூங்கு புதுமலர்
    ஆர்கழல் புகுவ - குறுந்தொகை 282

  2. வீழ்தாழைத் தாள்தாழ்ந்த
    வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர்
    சினைச்சுறவின் கோடு நட்டு
    மனைச் சேர்த்திய வல் அணங்கினால் ...
    உண்டு ஆடி - பட்டினப்பாலை 85

  3. திருமுருகாற்றுப்படை 192
  4. யாறு சேர்ந்து அன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
    பைம்புனல் நளிசினைக் குருகு இருந்து அன்ன
    வண்பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து
    அலங்குகுலை அலரி - அகநானூறு 178-9

  5. சிலப்பதிகாரம் 13-156
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கூதாளம்&oldid=1071275" இலிருந்து மீள்விக்கப்பட்டது