வெடிகுண்டு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெடிகுண்டு இந்தியா, மதுரையிலிருந்து 1933ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட ஓர் இதழாக இது கொள்ளப்படுகின்றது.

ஆசிரியர்[தொகு]

  • மஹதி

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் தீவிரவாதப் போக்குமிக்க கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தது. பிரித்தானியர் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக குரல்கொடுத்து வந்தது.

நிறுத்தம்[தொகு]

இச்சஞ்சிகையின் போக்குக் காரணமாக அரசாங்கத்தின் அடக்குமுறைக்குப் பலியானது. அக்கால கட்டத்தில் அரசு நட்டஈடாகக் கோரிய ஐயாயிரம் ரூபாவை செலுத்த முடியாது இவ்விதழ் நிறுத்தப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிகுண்டு_(சிற்றிதழ்)&oldid=746940" இலிருந்து மீள்விக்கப்பட்டது