வெங்கெர் தொகுப்புவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெங்கெர் தொகுப்புவினை (Wenker synthesis) பீட்டா அமினோ ஆல்ககாலை கந்தக அமிலத்தின் உதவியால் அசிரிடினாக மாற்றும் ஒரு கரிம வேதியியல் வினையாகும்.

வெங்கெர் தொகுப்புவினை
வெங்கெர் தொகுப்புவினை

அசிரிடின் தொகுப்பு வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. உயர் வெப்பநிலையில் (250°செல்சியசு) எத்தனாலமைன் கந்தக அமிலத்துடன் வினைபுரிவது முதல் படிநிலையாகும். இவ்வினையில் சல்பேட்டு மோனோ எசுத்தர் உருவாகிறது. இவ்வுப்பு சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து அசிரிடின் உருவாவது இரண்டாவது படிநிலையாகும். காரமானது இப்படிநிலையில் ஓர் அமீன் புரோட்டானை செயல்படுத்தி சல்பேட்டு குழுவை இடமாற்றம் செய்கிறது. குறைவான வெப்பநிலையில் (140-180 °செல்சியசு) முழுமையடாத எரிதலால் இடைநிலை வேதிப்பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.[1]

எப்பாக்சைடின் வளைய ஆக்டீனுடன் அமோனியா வினைபுரிவதால் கிடைக்கும் டிரான்சு 2-அமினோவளைய ஆக்டனாலைப் பயன்படுத்தி வெங்கெர் தொகுப்புவினை நிகழ்கிறது. இறுதியில், வளைய ஆக்டீனிமைன் (வெங்கெர் அசிரிடின் விளைபொருள்) வளைய ஆக்டனோன் ( ஆஃப்மான் நீக்க விளைபொருள்) ஆகியனவற்றின் கலவையைக் இவ்வினை கொடுக்கிறது [2]

9-அசாபைசைக்ளோ[6.1.0]நோனேன் தொகுப்புவினை
9-அசாபைசைக்ளோ[6.1.0]நோனேன் தொகுப்புவினை

.

மேற்கோள்கள்[தொகு]

  1. A Modification of Wenker's Method of Preparing Ethyleneimine Philip A. Leighton, William A. Perkins, and Melvin L. Renquist J. Am. Chem. Soc.; 1947; 69(6) pp 1540–40. (எஆசு:10.1021/ja01198a512)
  2. Chemistry of Ethylenimine. VII. Cycloöctenimine or 9-Azabicyclo[6.1.0]nonane D. V. Kashelikar, Paul E. Fanta J. Am. Chem. Soc.; 1960; 82(18); 4927–30. (எஆசு:10.1021/ja01503a044)