வீ. ருக்மணி லோகநாயகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீ. ருக்மணி லோகநாயகி (பிறப்பு: சனவரி 31 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் 'ருக்மணி லோகா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1992 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் தமது அமெரிக்க, அவுஸ்திரேலிய, இந்திய, தாய்லந்துப் பயணங்கள் பற்றித் தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "எழுதுகிறாள் புதுக்கவிதை" (சிறுகதைத் தொகுப்பு, 1998)

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

தமிழர் திருநாள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (2001).

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._ருக்மணி_லோகநாயகி&oldid=3229039" இலிருந்து மீள்விக்கப்பட்டது