வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபை இலங்கையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பேணுவதற்கும், மேம்படுத்துவதற்குமான பொறுப்புக் கொண்டுள்ள ஓர் அரசு அமைப்பு ஆகும். "ஏ" வகுப்பு வீதிகளும், "பி" வகுப்பு" வீதிகளும் இந்த அதிகார சபையின் பொறுப்பில் உள்ளன. ஏற்கனவே வீதி வலையமைப்பில் அடங்கியுள்ள வீதிகளுக்குப் புறம்பாகப் புதிய வீதிகளைத் திட்டமிடுவதும் அவற்றை வடிவமைத்துக் கட்டுவிப்பதும் இவ்வதிகாரசபையின் பொறுப்பு ஆகும்.

நிறுவன அமைப்பு[தொகு]

இது நாட்டிலுள்ள முதன்மையான குடிசார் பொறியியல் நிறுவனங்களில் ஒன்று. வீதிகளைத் திட்டமிடுதல், வீதிகளையும் பாலங்களையும் வடிவமைத்தல், கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைப் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறப்புத் திறமைகள் கொண்டவர்கள் பலர் இங்கே பணியில் உள்ளனர். பொது மேலாளரே இந்நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆவார். இவருக்குக் கீழ் பல இயக்குனர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தமக்குக் கீழ் தனியான பொறுப்புக்களைக் கொண்டுள்ளனர்.

பிரிவுகள்[தொகு]

இந்த அதிகார சபையில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை:

  • பராமரிப்பு மேலாண்மை மற்றும் கட்டுமானப் பிரிவு
  • வேலைகள் பிரிவு
  • பொறியியல் சேவைகள் பிரிவு
  • நெடுஞ்சாலைகள் வடிவமைப்புப் பிரிவு
  • ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு.
  • இயந்திரவியல் பிரிவு
  • பயிற்சிப் பிரிவு
  • திட்டமிடல் பிரிவு
  • சொத்து மேலாண்மை மற்றும் வருவாய்ப் பிரிவு
  • நிதிப் பிரிவு
  • நிர்வாகப் பிரிவு
  • நிலம் கையகப்படுத்தல் மற்றும் மீள் குடியேற்றப் பிரிவு
  • சட்டப் பிரிவு
  • உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு.


வெளியிணைப்புக்கள்[தொகு]