வீட்டுநெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீட்டுநெறி என்பது வீடுபேறு அடையும் நெறி. இது சமயம் கூறும் நெறி. சமயம் சாராத் தமிழ்நெறியில் ‘வீடு’ பற்றிய கருத்து இல்லை. அறநெறி கூறும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் எனவும், வாழ்நெறி கூறும் தொல்காப்பியம் இன்பம், பொருன், அறம் எனவும் வாழ்வியலைக் காட்டுகின்றன. மேலுலகம் [1], அளறு [2] வானுறையும் தெய்வம் [3], துறக்கம் [4] போன்ற கருத்துக்கள் தமிழரிடம் இருந்தன. என்றாலும் மேலுலகம், கீழுலகம் இத்தகையது என்று தமிழ்நூல்கள் விளக்கவில்லை. எனவே வீட்டுநெறியைத் தமிழில் கூறலாமா என்னும் வினா 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளது.

உடம்பை விட்ட உயிர் வாழும் இடம் சமயநெறியில் ‘வீடு’ எனப்படும். இது சிந்தையும் மொழியும் செல்லா நிலையினது. எனவே கண்டாரும், காண்பாரும் இல்லை. எனவே இதுபற்றிக் கூறலாமா என்னும் வினா சரியானதே.

மறைஞான தேசிகர் எழுதிய சிவதருமோத்தர உரை என்னும் நூலில் தமிழில் வீட்டுநெறி கூறலாமா என்னும் வினா எழுப்பப்பட்டு விடை சொல்லப்படுகிறது.

ஆளுடைய பிள்ளையார் இயற்றிய திருவுந்தியாரில் வீட்டுநெறி கூறப்பட்டுள்ளது. எனவே தமிழில் கூறலாம் என்று இந்த உரைநூல் குறிப்பிடுகிறது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருக்குறள் 222
  2. திருக்குறள் 255, 835, 919
  3. திருக்குறள் 50
  4. பெரும்பாணாற்றுப்படை 388
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுநெறி&oldid=1289840" இலிருந்து மீள்விக்கப்பட்டது