வி. பிரணவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பிரணவ்
Pranav V
பிறப்பு13 அக்டோபர் 2006 (2006-10-13) (அகவை 17)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2022)[1]
பிடே தரவுகோள்2486 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2611 (நவம்பர் 2023)

பிரணவ் வெங்கடேசு (Pranav Venkatesh) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

பிரணவ் 6 வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். கே. விசுவேசுவரன் உட்பட பல பயிற்சியாளர்ள் இவருக்கு பயிற்சியளித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு செர்பியா திறந்தநிலை போட்டி மற்றும் 2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அங்கேரி நாட்டின் புடாபெசுட்டு நகரத்தில் நடைபெற்ற வெசெர்கெப்சோ கிராண்டுமாசுட்டர் போட்டிகளில் இவர் தனது முதல் இரண்டு கிராண்டுமாசுட்டர் தகுதிப் புள்ளிகளை பெற்றார்.[2]

2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் ருமேனியாவின் பையா மேரில் நடந்த லிம்பீடியா திறந்தநிலை வெற்றியாளர் போட்டியை வென்றதன் மூலமாக பிரணவ், இந்தியாவின் 75 ஆவது கிராண்ட்மாசுடராகவும், தமிழ்நாட்டின் 27ஆவது கிராண்ட்மாசுடராகவும் ஆனார்.[3]

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் உலக U-16 வயதுக்குட்பட்டோர் ஒலிம்பியாடு போட்டி மற்றும் மாக்னசு கார்ல்சன் அகாடமி சதுரங்கப் போட்டி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் விளையாடி, இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.[4] பிரனேசு. எம், அர்சத்து. எசு, ரோகித்து. எசு, மிருத்திகா மல்லிக்கு மற்றும் போரமணிகர் தனிசா. எசு ஆகியோரும் இப்போட்டியில் விளையாடினர். பின்னர் இவர் இறுதிச் சுற்றில் இரவுனக் சத்வானியை தோற்கடித்து சதுரங்கம்24 இன் சதுரங்கப் போட்டியை வென்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. Ahmed, Shahid (August 22, 2022). "Pranav Venkatesh becomes India's 75th Grandmaster".
  3. "Chennai lad V Pranav becomes India's 75th Grandmaster". August 7, 2022.
  4. Tomar, Ajay (October 11, 2022). "15-year-old Tamil Nadu GM Pranav V wins gold, finishes first in two strong international tournaments at the same time".
  5. Watson, Leon (October 31, 2022). "V for victory! Pranav V wins Challengers Chess Tour in style".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பிரணவ்&oldid=3862842" இலிருந்து மீள்விக்கப்பட்டது