வி. பாஷ்யம் ஐய்யங்கார்
சர் திவான் பகதூர் வி. பாஷ்யம் அய்யங்கார் | |
---|---|
தலைமை வழக்கறிஞர், சென்னை மாகாணம் | |
பதவியில் 1897–1898 | |
முன்னையவர் | ஜெ. எச். ஸ்பிரிங் பிரான்சன் |
பின்னவர் | சி. எ. ஒயிட் |
பதவியில் 1899–1900 | |
முன்னையவர் | சி. எ. ஒயிட் |
பின்னவர் | ஜெ. இ. பி. வாலிஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார் சனவரி 1844 வெம்பாக்கம், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 18 நவம்பர் 1908 சென்னை மாகாணம் |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | சென்னை மாகாண தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் |
திவான் பகதூர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார் (Diwan Bagadur, Sir Vembakkam Bhashyam Aiyangar) (சனவரி 1844 – 18 நவம்பர் 1908), சென்னை மாகாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராகவும் விளங்கியவர்.
வகித்த பதவிகள்
[தொகு]பாஷ்யம் அய்யங்கார் 1897 முதல் மார்ச் 1898 முடியவும், பின்னர் செப்டம்பர் 1899 - மார்ச் 1900 வரையிலும், சென்னை மாகாணத் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய முதல் இந்தியர் ஆவார்.[1]
பிப்ரவரி 1897-இல் தமிழ்நாடு சட்ட மேலவையில் அலுவல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1899 மற்றும் 1900 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1][2]
பாஷ்யம் அய்யங்கார் சூலை 1901 முதல் 1904 முடிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராக பணியாற்றினார்.[3]
மரபுரிமைப் பேறுகள்
[தொகு]சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாஷ்யம் அய்யங்காரின் முழு உருவச்சிலை, 1927-இல் நிறுவப்பட்டது. இவரது பேத்தியான அம்புஜத்தம்மாள் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 India Office List 1905, Pg 439
- ↑ India Office List 1905, Pg 75
- ↑ "No. 27338". இலண்டன் கசெட். 26 July 1901. p. 4950.
மேற்கோள்கள்
[தொகு]- Great Britain India Office (1905). The India List and India Office List. London: Harrison and Sons.
- Some Madras Leaders. Allahabad: Babu Bishambher Nath Bhargava. 1922.