வி. பாலகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பாலகுமாரன்
பிறப்புஇலங்கை
அறியப்படுவதுதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்

வி. பாலகுமாரன்(V. Balakumaran[1]) என்பவர் ஆரம்ப காலத்தில் இலங்கையில் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பின் (ஈரோஸ்) இரண்டு உயர்நிலைத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1990 ஆம் ஆண்டில், இவரும் ஈரோஸ் உறுப்பினர்களில் பெரும் பகுதியினரும் அமைப்பை விட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர். பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் செயற்பட்டதாக கருதப்படுகிறது.

பின்னணி[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவரான பாலகுமாரன் வடகிழக்கு இலங்கையில் ஒரு சிறிய காட்டில் தமிழ் கிளர்ச்சியாளர்களை வீழ்த்திய இராணுவத்தினரின் தாக்குதலில் பலத்த காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 29, 2009 அன்று பாலகுமாரன் படுகாயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.[2][3] 2009 இறுதிப் போரின்போது பாலகுமாரன் இலங்கை இராணுவத்தினம் சரணடைந்ததாகவும், ஆனால் அதன் பிறகு இவர் குறித்த தகவல் தெரியவில்லை எனப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "People should fight for peace -Balakumaran". 2003-04-22. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8828. பார்த்த நாள்: 2008-12-21. 
  2. "Tamil novelist and scriptwriter V Balakumaran passes away at 71". indulgexpress.com. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
  3. TamilNet. "TamilNet". www-tamilnet-com.translate.goog (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  4. எங்கே பாலகுமாரன்?: கொல்லப்பட்டாரா? மறைக்கப்பட்டாரா? ஒன்இந்தியா 10. ஆகத்து 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பாலகுமாரன்&oldid=3941693" இலிருந்து மீள்விக்கப்பட்டது