உள்ளடக்கத்துக்குச் செல்

வி. திருவள்ளுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வி. திருவள்ளுவன்
13-ஆம் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பதவியில்
13 திசம்பர் 2021 - 20 நவம்பர் 2024
முன்னையவர்கோ. பாலசுப்பிரமணியன்
பின்னவர்????
தனிப்பட்ட விவரங்கள்
பணியிடம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

வி. திருவள்ளுவன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 13 டிசம்பர் 2021 முதல் [1] 20 நவம்பர் 2024 [2] வரை பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர்

[தொகு]

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியராக இருந்த இவர், 28 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர் ஆவார். [3]

கல்விப்பணி

[தொகு]

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல்வேறு கல்விப்பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார். [3]

  • சர்வதேச கல்விசார் நிகழ்வுகளில் நான்கு ஆய்வுக்கட்டுரைகளை அளித்துள்ளார்.
  • ஐந்து ஆய்வுக்கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளார்.
  • தமிழ் மொழி தொடர்பான ஐந்து சர்வதேச ஆய்வுநிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.
  • ஒன்பது ஆராய்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
  • 12 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.

நிர்வாகப்பணி, அயலகப் பயணம்

[தொகு]

பல்கலைக்கழக நிர்வாகத்தில் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், கல்வி மற்றும் ஆய்வு தொடர்பாக அயலகப்பயணங்கள் மேற்கொண்டுள்ளார். [3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._திருவள்ளுவன்&oldid=4263924" இலிருந்து மீள்விக்கப்பட்டது