வி. சி. சிர்புர்கர்
விகாசு சிறீதர் சிர்புர்கர் (V. S. Sirpurkar)(பிறப்பு 22 ஆகத்து 1946[1]) இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். இவர் 12 சனவரி 2007 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நான்கரை ஆண்டு பதவிக்காலத்தை முடித்து 21 ஆகத்து 2011 அன்று பணி ஓய்வு பெற்றார்.[2]
தொழில்
[தொகு]சிர்புர்கர் 1992-ல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார். பின்னர் திசம்பர் 1997-ல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இவர் உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 25 சூலை 2004 முதல் 19 மார்ச் 2005 வரை பணியாற்றினார். பின்னர் 20 மார்ச் 2005 முதல் சனவரி 11, 2007 வரை கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவிவகித்தார். இறுதியாக இவர் 2007 சனவரி 12 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் 65 வயதை அடைந்த பிறகு 21 ஆகத்து 2011 அன்று ஓய்வு பெற்றார். இந்திய உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மே, 2012-ல் நீதிபதி அரிஜித் பசாயத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சூலை, 2012 முதல் போட்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்
[தொகு]சிர்புர்கர் நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் வழங்கியா குறிப்பிடத்தக்கத் தீர்ப்புகளில் 2000ஆம் ஆண்டு தில்லி செங்கோட்டைத் தாக்குதலில் பாக்கித்தானியர் முகமது ஆரிப் என்கிற ஆஷ்பக் மீதான மரண தண்டனையை நீதிபதி டி. எஸ். தாக்கூர் கொண்ட இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் உறுதி செய்தது.[3] 2009 திசம்பரில் ஒரு பெண்ணின் சகோதரனால் "கௌரவக் கொலை" வழக்கில் இவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். ஹூச் வழக்கில் இவர் கேரள அரசை தொடர்புப்படுத்தினார். பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகம் வழங்கும் சேவைகள் 1986ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் "சேவை" வரம்பிற்குள் வரும் என்றும் இந்தச் சட்டத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதி திட்டச் சந்தாதாரரும் "நுகர்வோர்" என்று இவர் தீர்ப்பளித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble Mr. Justice V.S. Sirpurkar". Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
- ↑ "Sirpurkar retires, he was part of Bench that gave landmark verdicts". http://www.thehindu.com/todays-paper/tp-national/article2374705.ece. பார்த்த நாள்: 20 August 2011.
- ↑ Venkatesan, J. (11 August 2011). "Death sentence upheld for Red Fort attacker". The Hindu. http://www.thehindu.com/todays-paper/article2345004.ece. பார்த்த நாள்: 20 August 2011.