வி. கு. சதுர்வேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கு. சதுர்வேதி
V. K. Chaturvedi
பிறப்புஇந்தியா
பணிஇயந்திரப் பொறியாளர்
அணுசக்தி நிபுணர்
விருதுகள்பத்மசிறீ

வி. கு. சதுர்வேதி (V. K. Chaturvedi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இயந்திரப் பொறியாளரும் அணுசக்தி நிபுணரும் ஆவார். [1] இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றினார்.[2] 1965 ஆம் ஆண்டில் விக்ரம் பல்கலைக்கழகம் - சாம்ராட் அசோக் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்தார். டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியில் அணுசக்தி பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

அணுசக்தி ஆணையத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சதுர்வேதி இரிலையன்சு தொழிற்சாலை நிறுவனத்தில் சேர்ந்தார். இரிலையன்சு ஆற்றல் நிறுவனத்தின் புதிய ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர், நிர்வாக உரிமையற்ற செயல் அலுவலர், இரிலையன்சு புதிய ஆற்றல் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு இயக்குநர், இதே உள்கட்டமைப்பு நிறுவனத்தில் நிர்வாக உரிமையற்ற இயக்குநர் என பல பதவிகளில் இவர் பணியாற்றினார். இவற்றைத் தவிற பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[3]

சதுர்வேதி இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் உலக அணுசக்தி இயக்குநர்கள் சங்கத்தின் டோக்கியோ மையத்தின் தலைவராக இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக உலக அணுசக்தி இயக்குநர்கள் சங்கத்தின் ஆளுநர்கள் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[4] 2001ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vijay Kumar Chaturvedi". Bloomberg. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  2. "National Technology Day". Department of Atomic Energy. 2003. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  3. "Former Chairman and Managing Director of Nuclear Power Corporation of India Limited". Reliance Power. 2015. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கு._சதுர்வேதி&oldid=3761951" இலிருந்து மீள்விக்கப்பட்டது