வி.பி.சீமந்தினி
வி. பி. சீமந்தினி വി. പി. സീമന്തിനി | |
---|---|
அனைத்துல பெண்கள் நாளில் உரையாற்றும் சீமந்தினி | |
பிறப்பு | 19 மே 1951 திருச்சூர் மாவட்டம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | மூத்த வழக்கறிஞர் |
பணியகம் | சுகுமாரன் & உஷா நிறுவனம் |
வாழ்க்கைத் துணை | பி. கே. சிறீவத்சன் |
பிள்ளைகள் | அசுவதி , சுமித் (மருமகன்) |
வி.பி. சீமந்தினி (V.P.Seemandhini), ஒரு நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர், முக்கியமாக அரசியலமைப்பு சார்ந்த விஷயங்களில் 1976 முதல் கேரள உயர் நீதிமன்றத்திலும், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளை வாதிடுகிறார்.[1]
தொழில்
[தொகு]சீமந்தினி தற்போது கேரள மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி வருகிறார்.[2] மேலும், அகில இந்திய மகளிர் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு தலைவராகவும், கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் இருக்கிறார்.[3][4][5][6][7][8]
சொந்த வாழ்க்கை
[தொகு]சீமந்தினி தென்னிந்திய மாநிலமான கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் பிறாந்தார். இவர், 1976இல் வழக்கறிஞராகச் சேர்ந்தார். கேரளா, பெங்களூர் ஆகிய இடங்களிலுள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார். இவர் 2006 இல் கேரள உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சீமந்தினி, முதியோருக்கான மருத்துவமனையும், அனாதை இல்லமுமான சிறீ நாராயண சேவிக சமாஜத்தின் செயலாளராகவும், சிறீ தர்ம பரிபலனா யோகம் பச்சலம் கிளையின் தலைவராகவும் உள்ளார். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Judge calls for reform in legal education". தி இந்து. 2009-03-22. Archived from the original on 2009-03-25.
- ↑ "Kerala State Legal Services Authority". kelsa.gov.in.
- ↑ "National Conference". tnfwl.com. Archived from the original on 2020-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "All India Federation of Women Lawyers". indianwomenlawyers.com.
- ↑ "President to inaugurate women lawyers' meet". The Hindu.
- ↑ "President to inaugurate Women Lawyers' national conference". Hindustan Times. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "'Women in legislature will ensure gender-sensitive policies'". தி இந்து. 2010-05-03. Archived from the original on 2010-05-13.
- ↑ "Mathrubhumi English News Online - Latest News Kerala India World. NRI,Movies,Sports,Business". mathrubhumi.com. Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Ernakulam District News, Local News,എറണാകുളം , ,എസ്.എന്.ഡി.പി. യോഗം പച്ചാളം ശാഖാ വാര്ഷികം ,Kerala - Mathrubhumi". mathrubhumi.com. Archived from the original on 2015-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.