விஷ்ணு டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு டே
பிறப்பு(1909-07-18)18 சூலை 1909
வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 திசம்பர் 1982(1982-12-03) (அகவை 73)
கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிகவிஞர், கல்வியாளர்

விஷ்ணு டே (Bishnu Dey) என்பவர் நவீனத்துவ, பினநவீனத்துவ காலத்திய வங்காளக் கவிஞர், இலக்கியவாதி, கல்வியாளர் ஆவார்.[1][2][3] இவர் சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது போன்றவற்றைப் பெற்றவர்.

பிறப்பும் இளமையும்[தொகு]

இவர், மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவில் 18-7-1909 ஆம் ஆண்டு பிறந்தார். கல்கத்தா மித்ரா கல்வி நிறுவனத்திலும், சமஸ்கிருத கல்லூரியிலும், பங்கபாஷி கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற இவர் கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார். பின்னர் பிரசிடன்சி கல்லூரி, மவுலானா ஆசாத் கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

சிறு வயது முதல் இலக்கிய ஆர்வம் கொண்ட இவர், பரிசய் எனும் இலக்கிய இதழின் இணை ஆசிரியராகப் பணிசெய்தார். பண்டைய ஐரோப்பிய கலை, இலக்கியம், கலாச்சாரம் குறித்து எழுதினார். இளம் கவிஞர்கள் ஒன்று கூடி நடத்திய, கலோல் என்ற அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்து கவிதைப் பணியாற்றினார். நிருக்தா என்ற இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

  • ஊர்வசி ஓ அர்டெமிஸ்
  • அனிஷ்தா
  • ருசி ஓ பிரகதி
  • நாம் ரகேச்சி கோமல் காந்திர்
  • தி பெயின்டிங் ஆஃப் ரவீந்திரநாத் தாகூர்
  • இன் தி சன் அன்ட் தி ரைன்.

விருதுகள்[தொகு]

இவரது, ஸ்மிருதி சத்த பபிஷ்த் எனும் கவிதைத் தொகுப்பு 1965 ஆம் ஆண்டு வங்கமொழி இலக்கியத்திற்கான கேந்திரிய சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. அதே நூலுக்கு 1971 ஆம் ஆண்டு ஞானபீட விருதும் கிடைத்தது.[4] நேரு நினைவுப் பரிசு, சோவியத் லான்ட் விருது முதலான விருதுகளையும் பெற்றுள்ளார்.

மறைவு[தொகு]

இவர் 1982 ஆம் ஆண்டு தமது 73 ஆவது வயதில் மறைந்தார்.

மேற்கோள்[தொகு]

  1. Saccidanandan, தொகுப்பாசிரியர் (2006). Signatures: one hundred Indian poets. National Book Trust. பக். 444. 
  2. "Caltuttaweb - Bengali literature". Archived from the original on 19 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. webindia123.com-government of india-award-jnanpith award
  4. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 13 October 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_டே&oldid=3485163" இலிருந்து மீள்விக்கப்பட்டது