உள்ளடக்கத்துக்குச் செல்

விளாதிமிர் ஆர்னோல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாடிமிர் ஆர்னோல்ட்
விளாடிமிர் ஆர்னோல்ட் - 2008
பிறப்பு(1937-06-12)12 சூன் 1937
ஒடெசெ, சோவியத் யூனியன்
இறப்பு3 சூன் 2010(2010-06-03) (அகவை 72)
பாரிசு, பிரான்சு
தேசியம்சோவியத் யூனியன்
உருசியர்
துறைகணிதம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ மாநில பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Andrey Kolmogorov
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Alexander Givental
Askold Khovanskii
Boris Shapiro
Alexander Varchenko
அறியப்படுவதுArnold's cat map
Arnold conjecture
Arnold's rouble problem
KAM theorem

விளாடிமர் இகோரெவிசு ஆர்னோல்ட் (Vladimir Igorevich Arnold 12 ஜூன் 1937 – 3 ஜூன் 2010[1]) உருசிய கணிதவியலாளராவர். மாசுகோ மாநில பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே கணித கோட்பாடுகளை நிறுவிக் காட்டினார். படிப்பை முடித்துக் கொண்டபின் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். இவர் இறந்த பொழுது உருசிய அதிபர் கூறியது :

ஆர்னோல்டு இறந்தது ஒரு துக்க செய்தியாகும். இவரால் கணிதத் துறை முன்னேறியுள்ளது. நமது நாட்டிற்கே பெருமை சேர்த்த இவரை, இவரது சாதனையை அறிந்த ஒவ்வொருவர் நினைவிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

இவர் பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.1982ஆம் ஆண்டு இவருக்கு உலூயிசு நைரன்பர்கு என்பவருடன் சேர்த்து இவர்கள் நேரிலா வகைக்கெழுச் சமன்பாடுகளின் கோட்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக கிராஃபோர்டு பரிசு வழங்கப்பட்டது. 1981 இல் இவர் பெயர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளுக்கு (10031 Vladarnolda) இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_ஆர்னோல்டு&oldid=3620863" இலிருந்து மீள்விக்கப்பட்டது