உள்ளடக்கத்துக்குச் செல்

விளம்பர மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளம்பர மென்பொருளான Ask.com கருவிப்பட்டை

விளம்பர மென்பொருள் (Adware) என்பது தானியங்கு முறையில் விளம்பரங்களை வழங்கும் மென்பொருட்பொதி ஆகும்.[1] இவ்விளம்பர மென்பொருள்கள் மேல் வரல் பட்டி வடிவில் அமைந்திருப்பதுண்டு. சில மென்பொருள்களை நிறுவும்போது விளம்பர மென்பொருள்கள் காட்டப்படுவதுமுண்டு.

விளம்பர மென்பொருள் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல. ஆனாலும் சில விளம்பர மென்பொருள்கள் உளவு மென்பொருள்களைக் கொண்டிருந்து கணினியிலுள்ள தகவல்களைத் திருடக்கூடியவை.[2]

தீம்பொருள்[தொகு]

தகவல்களைத் திருடுகின்ற சில விளம்பர மென்பொருள்கள் தீம்பொருள்களின் ஒரு பிரிவான உளவு மென்பொருள்களினுள் அடக்கப்படும்.

பாதுகாப்பு[தொகு]

தீய விளம்பர மென்பொருள்களைக் கண்டுபிடித்து அகற்றுவதற்கு செய்நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அட்-அவார், மால்வேர்பைட்ஸ்' அன்டி-மால்வேர், ஸ்பைவேர் டாக்டர், ஸ்பைபாட்-சேச் & டிஸ்றோய் முதலிய மென்பொருள்களைப் பயன்படுத்தித் தீங்கு விளைவிக்கக்கூடிய விளம்பர மென்பொருள்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தவோ நீக்கவோ முடியும்.[3] தற்போது வெளிவரும் பெரும்பாலான வணிக நச்சுநிரல் தடுப்பிகள் தீய விளம்பர மென்பொருள்களைக் கண்டறியக் கூடியவையே.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

 • 180சேச் அசிஸ்டன்ட்
 • Ask.com கருவிப்பட்டை
 • போன்சிபடி
 • கிளிப் ஜெனி
 • காமத் கர்சர்
 • சய்டூர்
 • டாலர்ரெவென்யூ
 • பிளாஷ்கெட்
 • கேட்டர்
 • ஐசேச்
 • மிரர் கருவிப்பட்டை
 • மைவே சேச்பார்
 • வியூபாயிண்ட் மீடியா பிளேயர்
 • வென்யூ சேவ்நௌ
 • சாங்கோ தயாரிப்புகள்
 • ஜ்வின்கி
 • ஹாட்பார்
 • டென்சென்ட் க்யூ. க்யூ.
 • பிளே பிக்கிள்

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. விளம்பர மென்பொருள் (ஆங்கில மொழியில்)
 2. விளம்பரமென்பொருள் (ஆங்கில மொழியில்)
 3. ["இலவச விளம்பர மென்பொருள் நீக்கற்கருவிகளின் பட்டியல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12. இலவச விளம்பர மென்பொருள் நீக்கற்கருவிகளின் பட்டியல் (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளம்பர_மென்பொருள்&oldid=3571891" இலிருந்து மீள்விக்கப்பட்டது