வில்லியம் குட்டெல்
வில்லியம் குட்டெல் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 17, 1829 மால்டா |
இறப்பு | அக்டோபர் 27, 1894 பிலடெல்பியா, பென்சில்வேனியா | (அகவை 65)
அறியப்படுவது | குட்டெல் குறியீடு |
மருத்துவப் பணிவாழ்வு | |
தொழில் | மருத்துவர் |
சிறப்புத்துறை | மகளிர் நலவியல் |
கையொப்பம் |
வில்லியம் குட்டெல் (William Goodell (gynecologist); அக்டோபர் 17,1829- 27,1894) என்பவர் பிலடெல்பியாவியாவைச் சேர்ந்த ஓர் அமெரிக்க மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் குட்டெல்லின் குறியீடு என்று குறிப்பிடப்படுவதை முதலில் விவரித்ததற்காக நன்கு நினைவுகூரப்படுகிறார்.[1]
வாழ்க்கை
[தொகு]வில்லியம் குட்டெல் மால்டாவில் மிசனரி வில்லியம் குடெல்லின் மகனாகப் பிறந்தார். இவர் மாசசூசெட்சில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரி மற்றும் பிலடெல்பியாவில் உள்ள ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியில் பயின்று 1854-இல் பட்டம் பெற்றார்.[2] இவர் 1861 வரை கான்ஸ்டான்டினோப்பிளில் பணியாற்றினார். 1870ஆம் ஆண்டில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெண்களின் மகப்பேறியல் நோய்கள் குறித்த விரிவுரையாளராகவும், பின்னர் 1874-இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நோய்களில் மருத்துவ பேராசிரியராகவும் நியமிக்கப்படும் வரை இவர் மேற்கு மையத்தில் பணியாற்றினார்.[3]
1877ஆம் ஆண்டில் அமெரிக்கத் தத்துவ சங்கத்தின் உறுப்பினராக வில்லியம் குட்டெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
1882ஆம் ஆண்டில், இவர் 31 வயதான நோயாளியிடமிருந்து 51 கிலோ எடையுள்ள கருப்பைக் கட்டியை அகற்றினார். இந்த நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பிறகு 34 கிலோ எடையைக் கொண்டிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ William Goodell பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் at Mondofacto online medical dictionary
- ↑ Charles Cole Creegan, Josephine A.B. Goodnow. Great Missionaries of the Church, page 42. Ayer Publishing, 1972. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780836925418/
- ↑ Obituary Br Med J. 1894 November 17; 2 (1768): 1149.
- ↑ "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.