வில்லியம் ஆக்ட்ரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஆக்ட்ரெட்
வில்லியம் ஆக்ட்ரெட் இன் செதுக்கியசித்திரம், வென்செஸ்லாஸ் ஹோலர் என்பவரால்
பிறப்பு5 மார்ச்சு 1574
Eton, Buckinghamshire, இங்கிலாந்து
இறப்பு{30 சூன் 1660(1660-06-30) (அகவை 86)
அல்பரி, சர்ரே, இங்கிலாந்து
துறைகணிதவியலாளர்
பணியிடங்கள்கிங்ஸ் கல்லூரி கேம்பிரிட்ச்
கல்விஈடன் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்கிங்ஸ் கல்லூரி கேம்பிரிட்ச்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
அறியப்படுவது

வில்லியம் ஆக்ட்ரெட்(William Oughtred) என்பார் 1574 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் முதல் 1660 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் நாள் வரை வாழ்ந்தார்[1]. இவர் ஒரு ஆங்கிலக் கணிதவியலாளர் ஆவார்.இவர் இங்கிலாந்தின் கிறித்தவக் கோயிலைச் சேர்த்த மதகுருவும் ஆவார்..[2][3][4].ஜான் நேப்பியர் மடக்கைகளை கண்டுபிடித்த பிறகு எட்மண்ட் குண்டர் என்பார் நழுவு சட்டம் அல்லது ஊர்வு அளவுகோல் என்பதைஅடிப்படையாகக் கொண்ட மடக்கை அளவுகோல்களை (கோடுகள் அல்லது விதிகள்) உருவாக்கிய பிறகு, நேரடியாகப் பெருக்குதல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றைச் செய்வதற்கு இதுபோன்ற இரண்டு அளவுகோல்களை ஒன்றன்பின் ஒன்றாக சறுக்கி முதன் முதலாக பயன்படுத்தியவர் ஆக்ட்ரெட் ஆவார். [5] .[6]. இவர் 1622 ஆம் ஆண்டு நழுவு சட்டம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் ஆவார். இவர் பெருக்கல் குறியீடான"×" குறியீட்டையும் sine மற்றும் cosine செயல்பாடுகளுக்கு "sin" மற்றும் "cos" என்ற சுருக்கங்களையும் அறிமுகப்படுத்தியவர் ஆவார்.[7]

கல்வி[தொகு]

பெஞ்சமின் ஆக்ட்ரெட்டின் மகனாக, வில்லியம் ஆக்ட்ரெட் 1574/75 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பெர்க்ஷயர் எனும் ஊரில் பிறந்தா. இவர் ஈடன் கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு அவரது தந்தை, ஒரு எழுத்தாற்றல்-ஆசானாக இவருடைய ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்..[8] வில்லியம் ஆக்ட்ரெட் கணிதத்தில் பேரார்வம் கொண்டிருந்தார். இவர் மற்றவர்கள் தூங்கும் போது கூட கற்றுக் கொள்வதற்காக அடிக்கடி விழித்திருப்பார்..[9]. பின்னர் இவர் கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் 1596/97 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டமும் 1600 ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தையும் பெற்றார், 1595 ஆம் ஆண்டு முதல் 1603 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் ஆய்வு உதவித்தொகைப் பெற்றார்.[10].இவர் 1600 ஆம் ஆண்டில் லோஸ்லி பூங்காவின் சர் வில்லியம் மோருக்கு லத்தீன் மொழியில் இறுதி சடங்கு ஒன்றை இயற்றினார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. David Eugene Smith (1923). History of Mathematics. 1. பக். 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780486204291. https://books.google.com/books?id=12qdOZ0gsWoC&pg=PA392. 
  2. 'Oughtred (William)', in P. Bayle, translated and revised by J.P. Bernard, T. Birch and J. Lockman, A General Dictionary, Historical and Critical, (James Bettenham, for G. Strachan and J. Clarke, London 1734/1739), Vol. VIII, pp. 77-86 (Google).
  3. F. Willmoth, 'Oughtred, William (bap. 1575, d. 1660)', Oxford Dictionary of National Biography (2004).
  4.  Mullinger, James Bass (1895). "Oughtred, William". Dictionary of National Biography 42. London: Smith, Elder & Co. 356-358. 
  5. Smith, David E. (1958) (in en). History of Mathematics. Courier Corporation. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780486204307. https://books.google.com/books?id=eq5kDQAAQBAJ&q=1622+William+Oughtred&pg=PA205. 
  6. Florian Cajori (1919). A History of Mathematics. Macmillan. பக். 157. https://archive.org/details/ahistorymathema02cajogoog. "cajori william-oughtred multiplication." 
  7. Florian Cajori (1919). A History of Mathematics. Macmillan. பக். [https://archive.org/details/ahistorymathema02cajogoog/page/n169. https://archive.org/details/ahistorymathema02cajogoog. 
  8. Wallis, P.J. (1968). "William Oughtred's 'Circles of Proportion' and 'Trigonometries'". Transactions of the Cambridge Bibliographical Society 4 (5): 372–382. 
  9. F. Cajori, William Oughtred, a Great Seventeenth-Century Teacher of Mathematics (Open Court Publishing Company, Chicago 1916), pp. 12-14 (Internet Archive).
  10. "Oughtred, William (OTRT592W)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  11. 'Funeral ode by William Outhred', Surrey History Centre, ref. 6729/7/129 (Discovery Catalogue).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஆக்ட்ரெட்&oldid=3920121" இலிருந்து மீள்விக்கப்பட்டது