வில்மா ஆல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்மா கெ. ஆல்சன்

வில்மா கெ. ஆல்சன் (Wilma Olson) ( (பிறப்பு 1945) என்பவர் ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அளவு உயிரியல் பிரிவை சேர்ந்த விரிவுரையாளர் ஆவார். அது மட்டும் அல்லாமல் இவர் ஒரு பலபடி வேதியியல் வல்லுநர் ஆவார்.

கல்வி[தொகு]

ஆல்சன் தனது இளங்கலை பட்டதை 1967 ஆம் ஆண்டு தெலவர் பல்கலைகழகத்தில் பெற்றார். ஆல்சன் தனது முனைவர் பட்டதை 1971 ஆம் ஆண்டு ஸ்டன்போர்ட் பல்கலைகழகத்தில் பெற்றார்.[1]

ஆராய்ச்சி[தொகு]

ஆல்சன் கருவமிலத்தின் அமைப்பு, பண்புகள் மற்றும் இடைவினைகள் பற்றிய கருத்தியல் ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வானது, தாயனை (டி. என். ஏ) மற்றும் ஆறனை (ஆர். என். ஏ) ஆகியவற்றின் ஒட்டுமொத்த மடிப்புகளின் மீது கருவமிலங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் ஈனி பிணைப்புகள் ஆகியவற்றின் தாக்கத்தைப் பற்றி விளக்க முற்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "Faculty - Olma K Wilson". Rutgers School of Arts and Science. 7 சூலை 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்மா_ஆல்சன்&oldid=2774252" இருந்து மீள்விக்கப்பட்டது