வில்கெர்சன் பல் நாற்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்கெர்சன் பல் நாற்காலி மொகேவ் வரலாறு மற்றும் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

வில்கெர்சன் பல் நாற்காலி (Wilkerson dental chair) பல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் நீரியக்க வகை நாற்காலி ஆகும். 1877 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் முதன் முதலில் இதற்கு காப்புரிமை வழங்கப்பட்டது. பல் மருத்துவத்தில் பல கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற பசில் மான்லி வில்கெர்சன் இந்நாற்காலியை வடிவமைத்தார். [1]

விளக்கம்[தொகு]

காத்மேன் மற்றும் சர்டுலெப் பெயர்ப் பட்டியல் வரிசையின் 1882 ஆம் ஆண்டு பதிப்பில், இந்த நாற்காலி சிறந்த அசல் தன்மையைக் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. அனைத்து சுழல் அச்சுக்களும் நெம்புகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த முயற்சியால் நாற்காலியை ஒரு கால் நெம்புகோலால் உயர்த்த முடியும். மற்றொரு நெம்புகோலால் வேகமாகவும் சத்தமில்லாமலும் உயரத்தைக் குறைத்துக் கொள்ளவும் முடியும்.[2] மற்ற நெம்புகோல்கள் நாற்காலியை முழு வட்டமாக சுழற்றவும் முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கின்றன. கூடுதலாக, நாற்காலியின் பின்புறம் மற்றும் தலையிருக்கையை உயர்த்துவது அல்லது குறைப்பது, நோயாளி முன்னோக்கி சறுக்குவதை தடுக்க சாய்மான பகுதியை தேவையான அளவுக்கு சாய்த்துக் கொள்ளுதல், பாதத்தின் நீளம் மற்றும் உயரங்களைச் சரிசெய்தல் போன்ற சின்னச்சின்ன நகர்த்தல்களுக்கும் இதில் வழிசெய்யப்பட்டுள்ளது. நாற்காலியின் மேலுறை பட்டு துணி அல்லது தோலில் அமைக்கப்பட்டுள்ளது.[1]

1899 ஆண்டு நாற்காலிகளில் முன்னேற்றங்கள் பல கொண்டு வரப்பட்டு ஒரு நோயாளி கிடைமட்ட நிலையில் படுத்துக்கொள்ள உதவியது. நோயாளி எச்சில் துப்பிக் கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Basil Manly Wilkerson". Pierre Fauchard Academy. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
  2. Display board at an exhibit in the Mohave Museum of History and Arts.
  3. "New Model Wilkerson Dental Chair, 1899". The Henry Ford. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
  4. "திருவாரூர் அரசு மருத்துவமனையில் பல்சிகிச்சைக்கான நவீன நாற்காலி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/nov/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-2591111.html. பார்த்த நாள்: 19 August 2021.