விலாங்கூகைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலாங்கூகைட்டு
Wilancookite
பிரேசில் நாட்டின் மினாசு கிரேய்சு மாநிலத்தின் இயெக்விடிங்கோங்கா நகராட்சியில் கிடைத்த விலாங்கூகைட்டு கனிமம்
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு
வேதி வாய்பாடு(Ba,K,Na)8(Ba,Li,[ ])6Be24P24O96·32H2O
இனங்காணல்
படிக அமைப்புகனசதுரம்
மேற்கோள்கள்[1]

விலாங்கூகைட்டு (Wilancookite) என்பது (Ba,K,Na)8(Ba,Li,[ ])6Be24P24O96·32H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். பெரிலியம் பாசுப்பேட்டு அணைவுச் சேர்மமான இக்கனிமம் மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய கனிமமாகும். பிரேசில் நாட்டிலுள்ள மினாசு கிரேய்சு மாநிலத்தின் இயெக்விடிங்கோங்கா நகராட்சியில் விலாங்கூகைட்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது.[1][2]

தொடர்புடைய கனிமங்கள்[தொகு]

விலாங்கூகைட்டு பகாசபைட்டு என்ற இலித்தியம் கொண்டுள்ள பெரிலியம் பாசுப்பேட்டு கனிமத்துடன் தொடர்புடையதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Menezes Filho, L.A.D., Hatert, F., Philippo, S., Ottolini, L., Dal Bo, F., Scholz, R., Chaves, M.L.S.C., Yang, H., and Downs, R.T., 2015. Wilancookite, IMA 2015-034. CNMNC Newsletter No. 27, October 2015, 1228; Mineralogical Magazine 79, 1229–1236
  2. "Wilancookite: Wilancookite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  3. "Pahasapaite: Pahasapaite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாங்கூகைட்டு&oldid=3775222" இலிருந்து மீள்விக்கப்பட்டது