விலங்குத் தொழினுட்பம்
விலங்குத் தொழில்நுட்பம் (Animal technology) என்பது விஞ்ஞான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் ஆய்வகத்தில் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் பராமரித்தல் போன்ற நடைமுறைகளைக் குறிக்கிறது. விலங்குத் தொழில்நுட்பம் பதிவுசெய்யப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பகுதிகளில் ஒன்றாகும், விலங்குத் தொழில்நுட்ப வல்லுநர்கள் விலங்குகள் ஆய்வுக்கு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். [1]கால்நடை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம், ஆய்வக விலங்குகளுக்கு அவசியமான அன்றாட பராமரிப்பை வழங்குதல், விலங்கு நல நடைமுறைகள் பேணுதல், அனைத்து செயல்பாடுகளும் சட்ட சிக்கல்களுக்கு இணங்குவதை உறுதி செய்தல் மற்றும் அத்தியாவசிய அறிவியல் நடைமுறைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை விலங்குத் தொழில்நுட்பத்தின் முக்கிய பகுதிகளாகும். [2][3] விலங்குத் தொழில்நுட்பவியலாளர்களுக்கான தொழில்நுட்பத் தகுதிகளும், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் நாடுகள் வாரியாக மாறுபடுகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளில் விலங்குத் தொழில்நுட்பம் என்பது மிகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு தொழிலாகவும் ஆய்வக நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. [4][5][6] விலங்குத் தொழில்நுட்பம் விலங்கு மேலாண்மைத் துறையுடன் தொடர்புடையது. இத்தொழில்நுட்ப வல்லுநர்கள் பெரும்பாலும் ஆய்வகத்திலோ அல்லது புலத்திலோ குறிப்பிட்ட வகை விலங்குகளுடன் பணியாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். [7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Barnnett, Stephen (2001). Introduction to Animal Technology. London: Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0632055944.
- ↑ Barnett, Stephen (2007). Manual of Animal Technology. London: Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0632055937. https://archive.org/details/manualofanimalte0000unse.
- ↑ Greenhough, Beth; Roe, Emma (10 August 2017). "Exploring the Role of Animal Technologists in Implementing the 3Rs: An Ethnographic Investigation of the UK University Sector". Science, Technology, & Human Values 43: 694–722. doi:10.1177/0162243917718066. பப்மெட்:30008494.
- ↑ "Animal technician / Animal Technologist". National Careers Service. 7 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Careers Guide: Animal Technician". 7 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Laboratory Animal Technician". Zippa. 7 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Romick, Molly; Chavez, Javier; Bishop, Bruce (1 November 2006). "An interdisciplinary performance-based approach to training laboratory animal technicians". Lab Animal 35 (10): 35–39. doi:10.1038/laban1106-35. பப்மெட்:17077833.