விருந்தோம்பல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயணிகளுக்கு பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்யும் துறை விருந்தோம்பல் துறை ஆகும். இது விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாச் சேவைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. பல பில்லியன்கள் மதிப்புக்கொண்ட இத்துறை, ஓய்வுக்கான நேரமும், பகிரக்கூடிய வருமானமும் கிடைக்கக்கூடியதாக இருப்பதில் தங்கியுள்ளது. இந்தத் துறை பொருளாதாரச் சுழற்சிகளின் தாக்கங்களால் இலகுவாகப் பாதிக்கப்படக் கூடியது.

பயன்பாட்டு வீதம் அல்லது அதன் நேர்மாறான வெற்றிட வீதம் என்பது விருந்தோம்பல் துறையில் முக்கியமானதொரு மாறி ஆகும். ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தனது உற்பத்திச் சாதனங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூடுதலாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று விரும்புவதுபோல, உணவகங்கள், விடுதிகள், கருப்பொருட் பூங்காக்கள் போன்றவையும், தமது வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்ந்த அளவில் வைத்திருக்கும் நோக்கம் கொண்டிருப்பவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருந்தோம்பல்_துறை&oldid=2741812" இலிருந்து மீள்விக்கப்பட்டது